பிக்ஹ் துறையில் கருத்து முரண்பட்டவர்களுடன் இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) எப்படி நடந்து கொண்டார்?!

بسم الله الرحمن الرحيم

அல்லாமா ரபீ இப்னு ஹாதீ அல்மத்ஹலீ (ஹபிளஹுல்லாஹ்) கூறுகின்றார்:

நான் அல்பானீ அவர்களுடன் ஒரு ஜனாஸா தொழுகையை தொழுதேன். அவர் தக்பீரில் தனது இரு கைகளையும் உயர்த்தவில்லை. நான் உயர்த்தினேன். அவருக்கு பக்கத்தில் தான் நானும் இருந்தேன். தொழுகையின் பின்னர் அவரைப் பார்த்து "எமது ஷெய்ஹ் அவர்களே! நானும் உங்களது கருத்தில் தான் இருந்தேன், பின்பு அது விடயத்தில் உங்களுக்கு முரண்பட்டு விட்டேன்" என்று கூறினேன். அதற்கு ஷெய்ஹ் "நல்லது" எனக்கூறினார். நான் எனது கருத்து சார்பாக சில என்னுடைய வாதங்களையும் ஆதாரங்களையும் அவரிடத்தில் முன்வைத்தேன். அவர் ஒழுக்கத்துடனும் மரியாதையுடனும் அதனை ஏற்றுக்கொண்டார்.

அல்மஜ்மூஃ 15/228