பிக்ஹின் அடிப்படைகள் – 4

. كل صلاة يؤذن لها في وقتها، والدليل حديث مالك بن الحويرث - رضي الله عنه - أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: فإذا حضرت الصلاة فليؤذن لكم أحدكم وليؤمكم أكبركم. وفيه الأمر بأداء الصلوات الخمس في جماعة متفق عليه.

66. ஒவ்வொரு தொழுகைக்கும் அதனதன் நேரத்திற்கு அதான் சொல்லப்படும். இதற்கான சான்றாகப் பின்வரும் மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: தொழுகையுடைய நேரத்தை அடைந்தால், உங்களுக்காக உங்களில் ஒருவர் அதான் சொல்லட்டும், மேலும் உங்களில் வயதில் மூத்தவர் தொழுகை நடாத்தட்டும். இச்செய்தியில் ஐவேளைத் தொழுகைகள் கூட்டாக நடாத்தப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. (புகாரி முஸ்லிம்)

من سمع النداء يقول مثل ما قال المؤذن، والدليل حديث أبي سعيد الخدري - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وعلى آله وسلم- قال: إذا سمعتم النداء، فقولوا مثل ما يقول المؤذن. متفق عليه.

67. யார் அதானைச் செவிமடுக்கிறாரோ அவர் முஅத்தின் கூறுவதைப் போன்று கூறட்டும். இதற்கான சான்றாக அபூ ஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: நீங்கள் (அதானின்) அழைப்பைச் செவிமடுத்தால் முஅத்தின் கூறுவதைப் போன்று கூறுங்கள்.' (புகாரி முஸ்லிம்)

إذا قمت إلى الصلاة، فاستقبل القبلة، والدليل قول الله تعالى: فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ البقرة:144

68. நீர் தொழுகைக்காக எழுந்து நின்றால், கிப்லாவை முன்னோக்கு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: எனவே, நீர் விரும்புகின்ற கிப்லாவை நோக்கி, நிச்சயமாக நாம் உம்மைத் திருப்புவோம். எனவே, (இப்பொழுது) உம்முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமாகத் திருப்புவீராக! நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அதன் பால் திருப்புங்கள். (அல்பகரா: 144)

رفع اليدين في الصلاة في أربعة مواضع، والدليل حديث عبدالله بن عمر - رضي الله عنهما - أن النبي - صلى الله عليه وعلى آله وسلم - كان إذا دخل في الصلاة كبر ورفع يديه حذو منكبيه، وإذا ركع رفع يديه، وإذا قال: سمع الله لمن حمده رفع يديه وإذا قام من الركعتين رفع يديه، وكان ابن عمر يفعل ذلك. متفق عليه. والرفع إذا قام من الركعتين انفرد به البخاري.

69. தொழுகையில் இரு கைகளையும் நான்கு இடங்களில் உயர்த்துதல். இதற்கான சான்றாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் தொழுகையில் நுழைந்தால் தக்பீர் கூறுபவர்களாகவும் மேலும், தனது இரு கரங்களையும் தோள்புயங்கள் வரை உயர்த்துபவர்களாகவும் இருந்தார்கள். இன்னும், ரகூஉ செய்தால் தனது இரு கரங்களையும் உயர்த்துவார்கள். மற்றும், سمع الله لمن حمده என்று கூறினால் தனது இரு கைகளையும் உயர்த்துவார்கள். (மேலும், இரு ரக்அத்துக்களைவிட்டும் எழுந்தாலும் தனது இரு கைகளையும் உயர்த்துவார்கள்.)

மேலும், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். (புகாரி முஸ்லிம்) மேலும், இரு ரக்அத்துக்களில் இருந்தும் எழுந்தால் கைகளை உயர்த்துவது தொடர்பான செய்தி இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தொட்டும் தனித்து இடம்பெற்றுள்ளது.

وضع اليد اليمنى على اليد اليسرى في الصلاة ، والدليل حديث سهل بن سعد رضي الله عنهما قال : كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على اليد اليسرى في الصلاة ، ورفع ذلك إلى النبي صلى الله عليه وسلم

70. தொழுகையில் வலது கையை இடது கையின் மீது வைத்தல். இதற்கான ஆதாரமாக ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் பின்வரும் கூற்றைக் குறிப்பிடலாம். தொழுகையில் தனது வலது கரத்தை இடது கரத்தின் மீது வைக்க வேண்டும் என மனிதர்கள் ஏவப்படக்கூடியவர்களாக இருந்தார்கள் என்கிறார்கள். மேலும், இச்செய்தியை நபியவர்களின் பால் உயர்த்தினார்கள்.

أصح دعاء في الاستفتاح بعد تكبيرة الإحرام ما جاء في حديث أبي هريرة - رضي الله عنه - قال: كان رسول الله - صلى الله عليه وعلى آله وسلم - إذا كبر في الصلاة سكت هنيهة قبل القراءة، فسئل عما يقول، فقال: أقول اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب، اللهم نقني من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد. متفق عليه.

71. ஆரம்ப தக்பீருக்குப் பிறகு துவக்கத்தில் ஓதப்படும் மிகச் சரியான துஆ அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் இடம் பெரும் பின்வரும் செய்தியாகும். நபியவர்கள் தொழுகையில் தக்பீர் கூறினால் ஓத ஆரம்பிப்பதற்கு முன்னதாக சற்று மௌனிப்பார்கள். அவ்வாறு மௌனிக்கும் சந்தர்ப்பத்தில் என்ன ஓதுவார்கள்? என்று கேட்க்கப்பட்டதற்கு,

اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب، اللهم نقني من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد

என்று தான் கூறியதாகக் கூறினார்கள். (புகாரி முஸ்லிம்)

பொருள்: இறைவா! கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் எவ்வாறு தூரப்படுத்தி வைத்துள்ளாயோ அதேபோன்று எனக்கும் எனது பாவங்களுக்கும் மத்தியில் தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்ணிற ஆடையைவிட்டும் அழுக்கு எவ்வாறு தூய்மைப்படுத்தப்படுமோ அதேபோன்று பாவங்களைவிட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! என்னுடைய பாவங்களை நீர், பனிக்கட்டி, ஆலங்கட்டி ஆகியவற்றைக் கொண்டு கழுவுவாயாக!

قبل قراءة الفاتحة استعذ بالله من الشيطان الرجيم، وسم الله سرا، والدليل فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ النحل:98، وعن أنس ابن مالك -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم-، وأبا بكر، وعمر -رضي الله عنهم- كانوا يفتتحون الصلاة بـالحمد لله رب العالمين. متفق عليه، وفي لفظ: فكانوا لا يجهرون بـبسم الله الرحمن الرحيم.

أخرجه أحمد 3/179، والنسائي 2/135 بسند صحيح

72. பாத்திஹா அத்தியாயத்தை ஓதுவதற்கு முன்பு أعوذ بالله من الشيطان الرجيم என்று கூறி எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் பாதுகாப்புத் தேடு! மேலும், இரகசியமாக بسم الله الرحمن الرحيم என்று கூறு! அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீர் அல்குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்வீராக! (அந்நஹ்ல்: 98) மேலும், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நிச்சயமாக நபியவர்களும் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் தொழுகையை الحمد لله رب العالمين என்ற வார்த்தையைக் கொண்டே ஆரம்பிப்பார்கள். (புகாரி முஸ்லிம்) வேறு வாசகத்தில்: அவர்கள் بسم الله الرحمن الرحيم என்ற வார்த்தையை சத்தமிட்டுக் கூறமாட்டார்கள். (அஹ்மத்: 3/179, அந்நஸாயி: 2/135) இச்செய்தி ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டு அமைந்துள்ளது.

بعد الاستعاذة والبسملة اقرإ الفاتحة، والدليل حديث عبادة بن الصامت -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. متفق عليه.

73. இஸ்திஆதா أعوذ بالله من الشيطان الرجيم மற்றும் பஸ்மலா بسم الله الرحمن الرحيم ஆகியவற்றைத் தொடர்ந்து பாதிஹா அத்தியாயத்தை ஆரம்பிப்பாய்! அதற்கான ஆதாரமாவது உபாதத் இப்னு அஸ்ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் ஆகும். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: யார் திருக்குர்ஆனின் தோற்றுவாயான பாதிஹா அத்தியாயத்தை ஓதவில்லையோ அவருக்குத் தொழுகை கிடையாது. (புகாரி முஸ்லிம்)

التأمين ، والدليل حديث أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا : آمين متفق عليه. وعن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال : ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتأمين أخرجه ابن ماجه وهو حديث حسن

74. ஆமீன் கூறுதல். இதற்கான ஆதாரம் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாககும். நபியவர்கள் கூறினார்கள்: இமாம் غير المغضوب عليهم ولا الضالين என்று கூறினால், நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள். (புகாரி முஸ்லிம்) மேலும், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்: ஸலாம் மற்றும் ஆமீன் கூறுவதின் மூலம் யூதர்கள் உங்கள் மீது பொறாமைப்படுவதைப் போன்று, வேறு எதனைக் கொண்டும் உங்கள் மீது அவர்கள் பொறாமைப்படுவதில்லை. (இப்னு மாஜா) இது ஹஸன் எனும் தரத்தையுடைய ஹதீஸாகும்.

الصلاة باطمئنان، والدليل حديث أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال للمسيء صلاته: إذا قمت إلى الصلاة فكبر، ثم اقرأ ما تيسر معك من القرآن، ثم اركع حتى تطمئن راكعا، ثم ارفع حتى تعتدل قائما، ثم اسجد حتى تطمئن ساجدا، ثم افعل ذلك في صلاتك كلها. متفق عليه.

75. அமைதி கலந்த தொழுகை, இதற்கான ஆதாரமாக பின்வரும் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் தன் முன்னிலையில் தனது தொழுகையில் தவறுவிட்டவரைப் பார்த்துக் கூறும்போது: நீர் தொழுகைக்காக எழுந்து நின்றால் தக்பீர் கூறு, பிறகு உன்னிடத்தில் இருக்கும் இலகுவான அல்குர்ஆனிய வசனங்களை ஓது, பிறகு அமைதியடையும் வரை ருகூஉ செய், பிறகு நேராக நிற்கும் வரை தலையை உயர்த்து, பிறகு அமைதியடையும் வரை சுஜூது செய், பிறகு அதனை உனது தொழுகைகள் அனைத்திலும் அவ்வாறே செய்து கொள் என்றார்கள். (புகாரி முஸ்லிம்)

النزول إلى السجود على اليدين، والدليل حديث البراء بن عازب -رضي الله عنه- قال: كان رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- إذا قال سمع الله لمن حمده، لم يحن أحد منا ظهره حتى يقع النبي -صلى الله عليه وعلى آله وسلم- ساجدا، ثم نقع سجودا بعده. متفق عليه، وانحناء الظهر يكون في النزول على اليدين.

76. இரு கைகளைக் கொண்டு சுஜூதுக்கு செல்லல், அதற்கான ஆதாரமாக அல்பர்ராஉ இப்னு அதிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நபியவர்கள் سمع الله لمن حمده என்று கூறக்கூடியவர்களாக இருந்தால், அவர்கள் சுஜூதில் விழும் வரை எங்களில் எவரும் தனது முதுகை வளைக்கமாட்டார்கள். பிறகு நாங்கள் அவர்களுக்குப் பிறகு சுஜூதில் விழுவோம். (புகாரி முஸ்லிம்) மேலும், முதுகு வளைதலானது இரு கைகள் மீது சுஜூதிற்காக இறங்குவதில் அமைந்திருக்கும்.

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK