பிக்ஹின் அடிப்படைகள் – 3

من لبس الخفين، أو الجوربين على وضوء، يشرع له أن يمسح عليهما، إن كان مقيما يمسح عليهما يوما وليلة، وإن كان على سفر يمسح عليهما ثلاثة أيام بلياليهن، والدليل حديث أبي بكرة رضي الله عنه أن النبي صلى الله عليه وعلى آله وسلم رخص للمسافر إذا توضأ، ولبس خفيه، ثم أحدث وضوءا أن يمسح ثلاثة أيام ولياليهن، وللمقيم يوما وليلة. أخرجه ابن ماجه، وهو حديث حسن، وله شواهد يصح بها. والمسح على ظاهر الخفين، والدليل حديث علي بن أبي طالب رضي الله عنه- قال: وقد رأيت رسول الله صلى الله عليه وعلى آله وسلم يمسح على ظاهر خفيه. أخرجه أبوداود، وهو صحيح

62. யார் வுழூவின் போது மூடிய காலணிகள் அல்லது காலுறைகள் அணிந்திருக்கின்றாரோ அவருக்கு அவற்றின் மீது நீரால் தடவிவிடுவது மார்க்கமாக்கப்பட்டுள்ளது. அவர் ஊர்வாசியாக இருக்கும் போது அவை இரண்டின் மீதும் ஒரு நாள் இரவு பகல் பூராகவும், அவர் பிரயானத்தில் இருக்கும் போது மூன்று நாட்கள் இரவு பகல் உள்ளடங்கலாகவும் அவை இரண்டின் மீதும் தடவிக்கொள்வார். இதற்குச் சான்றாக அபூபக்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். ' நபியவர்கள் பிரயாணியாக இருப்பவருக்கு வுழூச் செய்து அவர் தனது காலுறைகளை அணிந்ததின் பிறகு மீண்டும் புதிதாக வுழு செய்ய நாடும் போது மூன்று நாட்கள் இரவு பகல் உள்ளடங்கலாகவும், ஊர்வாசிக்கு ஒரு நாள் இரவு பகல் பூராகவும் அவற்றின் மீது நீரால் தடவுவதற்கு சலுகை அளித்தார்கள்.' இதனை இமாம் இப்னு மாஜா அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். மற்றும், இது ஹஸன் எனும் தரத்தை வகிக்கும் செய்தியாகும். மேலும், இதற்குச் சான்று பகருகின்ற பல ஸஹீஹான செய்திகளும் உள்ளன.

மேலும், தடுவுதலானது காலுறைகளின் மேற்புறத்தில் மாத்திரம் இருக்க வேண்டும். (இதற்கு) அலி இப்னு அபீ தாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் (பின்வரும்) கூற்று சான்று (பகருகின்றது.) 'நபியவர்கள் தனது காலுறைகளின் மேற்புறத்தில் (நீரினால்) தடவ நான் பார்த்தேன்' என்கிறார்கள். இதனை அபூதாவுத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். மற்றும் இது ஸஹீஹான செய்தியாகும்.

إذا حضرت الصلاة ولم تجد الماء فتيمم، والدليل قوله تعالى: فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيداً طَيِّباً فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ المائدة:6، والصعيد هو تراب الأرض، والدليل حديث حذيفة أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال: وجعلت لنا الأرض كلها مسجدا، وجعلت تربتها لنا طهورا إذا لم نجد الماء- رواه مسلم

63. தொழுகையுடைய நேரத்தை அடைந்து (வுழூச் செய்வதற்குத் தேவையான) நீரை நீர் பெற்றுக் கொள்ளாத போது (மண்ணைக் கொண்டு) தயம்மம் செய்து கொள். இதற்கான சான்றாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடலாம். 'தண்ணீரைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் தூய்மையான மண்ணை நாடி உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் அதைக் கொண்டு தடவிக் கொள்ளுங்கள்.' (அல்மாயிதா: 06) (இங்கு) ஸஈத் என்ற வார்த்தையானது பூமியின் (மேற்பரப்பில் காணப்படும்) மண்ணைக் குறிக்கும். இதற்கான ஆதாரமாக ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'எங்களுக்கு பூமி பூராகவும் தொழுமிடமாக ஆக்கித்தரப்பட்டுள்ளது. மேலும், சுத்தம் செய்வதற்கு நாங்கள் நீரைப் பெறாத போது அதனுடைய மண் எங்களுக்கு சுத்தம் செய்யத் தருந்ததாகவும் ஆக்கித் தரப்பட்டுள்ளது.' இதனை இமாம் முஸ்லிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

فإذا فرغت من وضوءك تقول: أشهد أن لا إله إلا الله، وأن محمدا عبده ورسوله، والدليل حديث عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم : ما منكم من أحد يتوضأ، فيسبغ الوضوء، ثم يقول أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء- رواه مسلم

64. நீ உன்னுடைய வுழூவை நிறைவு செய்து கொண்டால்,

أشهد أن لا إله إلا الله، وأن محمدا عبده ورسوله

என்று கூறு.
பொருள்: வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் நிச்சயமாக முஹம்மத் நபியவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன். (இதற்கான) சான்றாகப் (பின்வரும்) உமர் இப்னு அல்ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியைக் குறிப்பிடலாம். நபியவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் அவர் தனது வுழூவைப் பூரணமாகச் செய்யட்டும். பிறகு

أشهد أن لا إله إلا الله، وأن محمدا عبده ورسوله

என்று சொல்லட்டும். (அவ்வாறு கூறுவதின் மூலம்) சுவனத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறந்து கொடுக்கப்படும். அவர் அவற்றில் நாடியதின் மூலம் நுழைந்து கொள்வார்.' இதனை இமாம் முஸ்லிம் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

نواقض الوضوء:

الخارج من القبل والدبر، والدليل حديث أبي هريرة رضي الله عنه : لا تقبل صلاة من أحدث حتى يتوضأ

النوم المستغرق والجنابة، والدليل حديث صفوان بن عسال رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وعلى آله وسلم يأمرنا إذا كنا سفرا أن لا ننزع خفافنا ثلاثة أيام ولياليهن إلا من جنابة، ولكن من غائط وبول ونوم. أخرجه الترمذي، وهو حديث حسن

ونوم الأنبياء ليس بناقض لوضوئهم، لحديث أنس ابن مالك رضي الله عنه أخرجه البخاري في الصحيح أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال: الأنبياء تنام أعينهم ولا تنام قلوبهم وهذه خصوصية لهم عليهم الصلاة والسلام

مس الذكر، والدليل حديث بسرة بنت صفوان رضي الله عنها أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال: من مس ذكره فلا يصل حتى يتوضأ. أخرجه الترمذي، وهو حديث حسن، وصحيح بشواهده عند أحمد وغيره من حديث عبدالله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال: أيما رجل مس ذكره فليتوضأ، وأيما امرأة مست فرجها فلتتوضأ

أكل لحم الإبل، والدليل حديث جابر بن سمرة رضي الله عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وعلى آله وسلم فقال: أنتوضأ من لحوم الإبل قال: نعم أخرجه مسلم

الردة، وهي ناقضة للوضوء وللإسلام، والدليل قول الله تعالى: وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ المائدة:5

زوال العقل بجنون أو إغماء أو سكر وما أشبهها من الأدوية المزيلة للعقل، أجمع العلماء أن الوضوء ينتقض بذلك

65. வுழுவை முறிக்கக்கூடிய காரியங்கள்:
1. முத்துவாரம் மற்றும் பித்துவாரம் அறியவற்றிலிருந்து (வெளியேறக்கூடியது) வெளியேறல். இதற்கான ஆதாரமாகப் (பின்வரும்) அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம்: 'தொடக்கு ஏற்பட்டவர் வுழூச் செய்யும் வரை அவரது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.' (புகாரி முஸ்லிம்)

2,3 ஆழ்ந்த தூக்கமும் குளிப்புக் கடமையாதலும்: இதற்குச் சான்றாகப் (பின்வரும்) ஸப்வான் இப்னு அஸ்ஸால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நாங்கள் பிரயாணத்தில் இருந்தால் கடமையான குளிப்பின் காரணமாக அன்றி எங்களது காலுறைகளை மூன்று நாட்கள் இரவு பகல் உள்ளடங்கலாகக் கலையாது இருக்குமாறு நபியவர்கள் எங்களுக்கு ஏவக்கூடியவர்களாக இருந்தார்கள். என்றாலும், மலம், சலம், தூக்கம் ஆகியவற்றின் காரணமாக (அவ்வாறு கலையாது வுழூ செய்து கொள்வோம்.)' இதனை இமாம் திர்மிதி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். மற்றும் இது ஹஸன் எனும் தரத்தைப் பெறுகின்ற செய்தியாகும். மேலும், நபிமார்களின் தூக்கமானது அவர்களது வுழூவை முறிக்கக்கூடியதாக இல்லை. (இதனை) புகாரி எனும் கிரந்தத்தில் இடம்பெறும் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியை (மையமாக வைத்துப் புரிந்து கொள்ளலாம்.) 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: நபிமார்களைப் (பொருத்தளவில்) அவர்களது கண்கள் தூங்குகின்றன உள்ளங்கள் தூங்குவதில்லை.' இது அவர்களுக்கு மாத்திரம் உரிய சிறப்பம்சம் ஆகும்.

4. மறையுறுப்பைத் தொடுதல்: இதற்குச் சான்றாக புஸ்ரா பின்து ஸப்வான் ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: யார் தனது மறையுறுப்பைத் தொடுகிறாரோ அவர் வுழூச் செய்யும் வரை தொழ வேண்டாம்.' இதனை இமாம் திர்மிதி அவர்கள் அறிவிக்கின்றார்கள். மற்றும், இது ஒரு ஹஸன் எனும் தரத்தையுடைய ஹதீஸ் ஆகும். மேலும், இச்செய்தி தனது சான்றுஹதீஸ்களின் மூலம் இமாம் அஹ்மத் மற்றும் அவரல்லாதவர்களிடத்தில் பதிவான அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸை வைத்து ஸஹீஹ் எனும் தரத்தைப் பெறுகின்றது. (அச்செய்தியாவது), 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: எந்த ஓர் ஆண் தனது மறையுறுப்பைத் தொடுகிறானோ அவன் வுழூச் செய்து கொள்ளட்டும். மேலும், எந்த ஒரு பெண் தனது மறையுறுப்பைத் தொடுகிறாளோ அவளும் வுழூச் செய்து கொள்ளட்டும்.

5. ஒட்டக இறைச்சி சாப்பிடுதல்: இதற்கான சான்றாகப் (பின்வரும்) ஜாபிர் இப்னு ஸமுரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் (குறிப்பிடலாம்.) 'நிச்சயமாக ஒரு மனிதர் நபியவர்களிடத்தில் சமுகம் தந்து ஒட்டக இறைச்சிகளுக்காக நாங்கள் வுழுச் செய்வதா? என்று வினவினார். அதற்கு நபியவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.' இதனை இமாம் முஸ்லிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

6. மதம் மாறுதல்: (இவ்வாறான காரியத்தில் ஈடுபடுவது), வுழூவையும் இஸ்லாத்தையும் முறித்துவிடும். அதற்கான சான்றாக (ப் பின்வரும்) அல்குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடலாம். 'எவர் நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக நிராகரிக்கிறாரோ அவரது செயல் நிச்சயமாக அழிந்து விடும்.' (அல்மாயிதா: 05)

7. பைத்தியம் அல்லது மயக்கம் அல்லது போதை போன்றவைகளின் காரணமாக புத்தி நீங்குதல், மற்றும் இவற்றிக்கு ஒப்பாகக்கூடிய விதத்தில் அமைந்த புத்தியை நீக்கக்கூடிய மருந்து வகைகளினால் உண்டாகக்கூடிய (மதிமயங்கிய) தன்மை ஏற்படுதல் போன்றவற்றின் காரணமாக வுழு முறியும் என்ற கருத்தில் அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்த கருத்தையுடையவர்களாக இருக்கின்றார்கள்.

على المسلم في كل يوم وليلة خمس صلوات مفروضة، والدليل حديث طلحة بن عبيدالله رضي الله عنه أن أعرابيا سأل رسول الله صلى الله عليه وعلى آله وسلم عن الإسلام، فقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم: خمس صلوات في اليوم والليلة. متفق عليه. فإذا قيل: كم في الخمس الصلوات ركعة؟ فقل: فيها سبع عشرة ركعة، الظهر أربع ركعات، والعصر أربع ركعات، والمغرب ثلاث ركعات، والعشاء أربع ركعات، والصبح ركعتان، وفي السفر تقصر الظهر، والعصر، والعشاء إلى ركعتين، فتصير إحدى عشرة ركعة

66. முஸ்லிமானவர் மீது ஒவ்வொரு (நாளிலும்) இரவு பகலில் ஐவேளைத் தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது. அதற்கான சான்றாக தல்ஹா இப்னு உபைதில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக ஓரு கிராமப்புற அறபி நபியவர்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றி வினவினார். அதற்கு நபியவர்கள், இரவு பகலில் ஐவேளைத் தொழுகைகள் உள்ளன எனக் கூறினார்கள்' (புகாரி முஸ்லிம்)

ஐவேளைத் தொழுகையில் எத்தனை ரக்அத்துக்கள் உள்ளன என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அதற்கு நீர் 17 ரக்அத்துக்கள் என்று கூறு. அவை, ளுஹருக்கு நான்கு ரக்அத்துக்களும், அஸருக்கு நான்கு ரக்அத்துக்களும், மஃரிபுக்கு மூன்று ரக்அத்துக்களும், இஷாவுக்கு நான்கு ரக்அத்துக்களும், சுபஹுக்கு இரு ரக்அத்துக்களும் ஆகும். மேலும் பிரயாணத்தில் ளுஹர், அஸர், இஷா ஆகியன இரு ரக்அத்துக்காளாகச் சுருக்கப்பட வேண்டும். எனவே, (இதனடிப்படையில்) 11 ரக்அத்துக்களாக ஆகிவிடுகின்றன.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK