பிக்ஹின் அடிப்படைகள் – 2

من آداب قضاء الحاجة

عن سلمان الفارسي -رضي الله عنه، أنه قيل له: علمكم نبيكم كل شيء حتى الخراءة، قال: أجل، لقد نهانا أن نستقبل القبلة بغائط أو بول، أو أن نستنجي باليمين، أو أن نستنجي بأقل من ثلاثة أحجار. أخرجه مسلم

56. மலசல தேவைகளை நிறைவேற்றச் செல்லும் போது பேணவேண்டிய ஒழுங்குகளில் நின்றும் உள்ளவை: 

மலசல தேவைகளுடன் தொடர்புபட்ட விடயங்கள் உள்ளிட்ட அனைத்தையும் உங்களது நபி உங்களுக்குக் கற்றுத்தந்துள்ளாரா? என்று ஸல்மான் அல்பாரிஸி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவப்பட்ட போது, உண்மைதான், மலம் அல்லது சலம் நிறைவேற்றும் தேவையின் போது நாங்கள் கிப்லாவை முன்னோக்குவதை அல்லது வலக்கரத்தைக் கொண்டு சுத்தம் செய்வதை அல்லது மூன்றைவிடக் குறைவான கற்களால் சுத்தம் செய்வதைவிட்டும் எங்களை அவர்கள் தடுத்தார்கள் என்றார்கள். (முஸ்லிம்)

لا تصح الصلاة إلا بوضوء، والدليل حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال: لا تقبل صلاة من أحدث حتى يتوضأ. متفق عليه، وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال: لا تقبل صلاة بغير طهور. أخرجه مسلم

57. வழூ இன்றி தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, அதற்கான ஆதாரமாவது, அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஆகும். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: தொடக்கு ஏற்பட்டவர் வுழூச் செய்யும் வரை அவரது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (புகாரி முஸ்லிம்) மேலும், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'சுத்தம் - வுழூ - இன்றி தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.' (முஸ்லிம்)

أعضاء الوضوء: الوجه؛ بما فيه المضمضة والاستنشاق، واليدان تغسلان إلى المرفقين، والرأس يمسح مسحا، والرجلان تغسلان إلى الكعبين

والدليل قول الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ المائدة:6 ، ولحديث عبدالله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال: ويل للأعقاب من النار متفق عليه

58. வுழூ உடைய உறுப்புக்கள்:

1. முகம், (வாய் கொப்பளித்தல் மற்றும் நாசிக்கு நீர் செலுத்தல் உள்ளடங்களாக)

2. இன்னும், இரு கரங்களும் முழங்கையுட்பட கழுவப்பட வேண்டும்,

3. மேலும், தலை ஒரு முறை நீரைத் தொட்டு தடவப்பட வேண்டும், - மஸ்ஹு செய்தல்

4. மற்றும், இரு கால்களும் கரண்டையுட்பட கழுவப்பட வேண்டும்.

(அதற்கான) ஆதாரமாவது: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் தலைகளை (தண்ணீரைத் தொட்டுத்) தடவிக் கொள்ளுங்கள். கரண்டை வரை உங்கள் கால்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்.) (அல்மாயிதா: 06)

மேலும், (இதற்குச் சான்றாக) அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள். 'கெண்டைக்கால்களுக்கு நரக நெருப்பில் இருந்தும் கேடு உண்டாகட்டும்.' (புகாரி முஸ்லிம்)

التيمن في الوضوء، وإطالة الغرة، والتحجيل، والدليل حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وعلى آله وسلم غسل يده اليمنى حتى شرع في العضد، وغسل اليسرى حتى شرع في العضد، ثم مسح برأسه، ثم غسل رجله اليمنى حتى شرع في الساق، ثم غسل رجله اليسرى حتى شرع في الساق، وقال: أنتم الغر المحجلون يوم القيامة من إسباغ الوضوء. أخرجه مسلم، وصح في سنن أبي داود من حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال: إذا لبستم، وإذا توضأتم، فابدءوا بأيامنكم

59. வுழுவின் போது வலதை முற்படுத்தல். மேலும், முகம் கால் உள்ளிட்ட பகுதிகளின் ஒளியை (மறுமையில்) நீட்டச் செய்தல். (அதற்கான) ஆதாரமாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் தனது வலது கையை புயம் வரை அடையக் கழுவினார்கள், மேலும் இடது கையையும் புயம் வரை அடையக் கழுவினார்கள். பிறகு தனது தலையை (தண்ணீரைத் தொட்டுத்) தடிவினார்கள். பிறகு தனது வலது காலை முன்னங்கால் வரை அடையக் கழுவினார்கள். பிறகு தனது இடது காலையும் முன்னங்கால் வரை அடையக் கழுவிவிட்டு வுழூவின் உறுப்புக்களை முழுமையாகக் கழுவுவதின் மூலமாக மறுமைநாளில் நீங்கள் முகம் கால் உள்ளிட்ட பகுதிகள் பிரகாசித்த நிலையில் காணப்படுவீர்கள் என்றார்கள். (முஸ்லிம்) இன்னும், ஸுனன் அபீதாவுதில் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் ஸஹீஹான செய்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாவது, நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: நீங்கள் அணிவதாக இருந்தாலும் வுழூச் செய்வதாக இருந்தாலும் உங்களது வலதையே முற்படுத்துங்கள்.

أحسن صفة لوضوء رسول الله صلى الله عليه وعلى آله وسلم: أنه غسل كفيه ثلاثا، ثم مضمض واستنشق، واستنثر يجمع بين المضمضة والاستنشاق من غرفة واحدة فعل ذلك ثلاثا ثم غسل وجهه ثلاثا، وغسل يديه إلى المرفقين ثلاثا حتى شرع في العضد، ثم مسح رأسه بماء غير فضل يده مرة واحدة، بدأ من قبل رأسه فأدبر بهما إلى قفاه، ثم أعادهما إلى حيث بدأ ثم غسل رجليه ثلاثا إلى الكعبين حتى شرع في الساق. ثبت ذلك من حديث عثمان رضي الله عنه. متفق عليه، وفيه زوائد من أحاديث أخرى صحيحة

ويستحب استعمال السواك قبل الصلاة، والدليل حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال: لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة. متفق عليه

61. நபியவர்களின் வுழூவின் அழகிய வர்ணணை:

நிச்சயமாக நபியவர்கள் தனது இரு கைகளையும் மூன்று முறைகள் கழுவுவார்கள். பிறகு வாய் கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தி அதனைச் சிந்துவார்கள். (வாய் கொப்பளித்தல் மற்றும் நாசிக்கு நீர் செலுத்தல் ஆகியவற்றை ஒரு கையளவு நீரில் இருந்து செய்வார்கள் - இச்செயற்பாட்டை மூன்று முறைகள் செய்வார்கள் - ) பிறகு தனது முகத்தை மூன்று முறைகள் கழுவுவார்கள். தனது இரு கைகளையும் முழங்கையுட்பட புயம் வரை அடைய மூன்று முறை கழுவுவார்கள். பிறகு தனது தலையைக் கையில் எஞ்சிய நீர் அல்லாத புதிதாகத் தொட்ட நீரினால் ஒரு முறை தடவுவார்கள். (அதன் போது) கைகளைத் தனது தலையின் முற்பகுதியில் இருந்து ஆரம்பித்து பிடறி வரை பின்நோக்கிக் கொண்டு செல்வார்கள். பிறகு ஆரம்பித்த இடத்தை நோக்கி மீட்டி எடுப்பார்கள். பிறகு தனது இரு கால்களையும் கரண்டை உட்பட முன்னங்கால் வரை அடைய மூன்று முறைகள் கழுவுவார்கள். இச்செய்தி உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. மேலும், இதிலே ஸஹீஹான ஏனைய ஹதீஸ்களின் மேலதிகமாக இடம்பெற்ற தகவல்களும் பதிவாகியுள்ளன.

இன்னும், தொழுகைக்கு முன்பாகப் பல் துலக்குவது விரும்பத்தக்க செயலாகும். இதற்குச் சான்றாகப் (பின்வரும்) அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'நான் என்னுடைய உம்மத்திற்குக் கஷ்டத்தைக் கொடுத்தேன் என்ற (பழிச் சொல்லுக்கு ஆளாகும்) நிலை எனக்கு ஏற்படாது என்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் நான் அவர்களுக்கு பல் துலக்குமாறு கட்டளையிட்டிருப்போன்.' (புகாரி முஸ்லிம்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK