பலவீனமான, பிரசித்திபெற்ற ரமழான் தொடர்பான ஹதீஸ்கள்

بسم الله الرحمن الرحيم

"ரமழான் மாதம், அதன் ஆரம்பப் பகுதி அருளும் அதன் நடுப்பகுதி மன்னிப்பும் அதன் இறுதிப் பகுதி நரக விடுதலையுமாகும்."

- தரம்: நிராகரிக்கத்தக்க செய்தியாகும்

- பார்க்க: ஸில்ஸிலா அள்ளஈபா : 2/262

"நீங்கள் நோன்பு பிடியுங்கள்! ஆரோக்கியம் அடைவீர்கள்!"

- தரம்: ளஈப் (பலவீனமானது)

- பார்க்க: ஸில்ஸிலா அள்ளஈபா     :1/420)

"யார் நோய் மற்றும் எவ்விதக் காரணமுமின்றி ரமழானில் ஒரு நோன்பை விடுகிறாரோ, அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும்  அதனைக் கழாச் செய்தவராகக் கருதப்பட மாட்டார்."

- தரம்: ளஈப் (பலவீனமானது)

- பார்க்க: மிஷ்காதுல் மஸாபீஹ் - அல்பானி  (1/626), ளஈப் ஸுனன் திர்மிதி - அல்பானி ஹதீஸ் இலக்கம்:  (115)

"ஒவ்வொரு நோன்பு திறத்தலின் போதும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நரகத்திலிருந்து விடுதலையாகக் கூடியவர்கள் இருப்பார்கள்."

- தரம்: ளஈப் (பலவீனமானது)

- பார்க்க: அல்பவாஇதுல் மஜ்மூஆ - ஷவ்கானி  (1/257)

"ரமழானில் உள்ளதை அடியார்கள் அறிவார்களென்றால் என்னுடைய உம்மத்தினர் வருடம் பூராகவும் ரமழான் இருக்க ஆசை வைப்பார்கள். நிச்சயமாக சுவனம் ரமாழானுக்காக வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து..."

- தரம்: ளஈப் (பலவீனமானது)

- பார்க்க: அல்பவாஇதுல் மஜ்மூஆ -    ஷவ்கானி (1/254)

"அல்லாஹ்வே! எங்களுக்கு ரஜப், ஷஃபான் ஆகிய மாதங்களில் அருள் புரிவாயாக! மேலும், ரமழானை அடையச் செய்வாயாக!" 
                                   
- தரம்: ளஈப் (பலவீனமானது)

- பார்க்க: ளஈபுல் ஜாமிஇ (அல்பானி)

 "நபியவர்கள் நோன்பு திறக்கும் போது:

الَّلهُمّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்."

- தரம்: ளஈப் (பலவீனமானது)

- பார்க்க: ளஈபுல் ஜாமிஇ (அல்பானி)