பட்டாசுகளை விற்பதும் வாங்குவதும் கூடுமா?

بسم الله الرحمن الرحيم

பட்டாசுகளை விற்பதும் வாங்குவதும் ஹராம் என்று நான் கருதுகிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:

1. அவைகளை விற்பதிலும் வாங்குவதிலும் பணம் வீணாக்கப்படுகிறது. பணம் வீணாக்கப்படுவது ஹராமாகும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனைத் தடுத்துள்ளார்கள்.

2. பட்டாசுகளின் தொந்தரவளிக்கக்கூடிய சத்தங்களால் மனிதர்கள் நோவினை அடைகின்றனர்.

சிலவேளை பட்டாசுகள் முழுமையாக எரிந்து அணையாதபோது மிக விரைவாக தீப்பிடிக்கக்கூடிய ஒன்றில் அவை விழுந்துவிட்டால் தீ பரவக்கூடிய நிலை ஏற்படும்.

இந்த இரண்டு காரணங்களுக்காகவும் பட்டாசுகளை விற்பதும் வாங்குவதும் ஹராமாகும். அவைகளை விற்பதும் வாங்குவதும் கூடாது என்று நாம் கருதுகிறோம்.

வழங்கியவர்: அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்)

மஜ்மூஉல் பதாவா: (3/3)

தமிழில்: அஸ்கீ இப்னு ஷம்சுல்ஆப்தீன்