நீங்களும் இப்படிப்பட்ட தந்தைமாரா?

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் (ஹபிளஹுல்லாஹ்) கூறுகின்றார்:

அதிகமான தந்தைமார் தமது பிள்ளைகள் குறித்து எதையும் அறியாதவர்களாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் தமது பிள்ளைகளுக்குத் தேவையான உணவு, குடிபானம், ஆடை, வதிவிடம் ஆகியவற்றை நிரப்பமாகப் பெற்றுக் கொடுப்பார்கள். இது தவிர்ந்த பிள்ளைகளின் ஏனைய விவகாரங்களை அறியாதவர்களாக இருப்பார்கள்.

தமது பிள்ளைகள் குறித்து விசாரிக்கமாட்டார்கள், அவர்களைப் பின்தொடர்ந்து கவனிக்கமாட்டார்கள், அவர்கள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள், எதைக் கற்கின்றார்கள் போன்றவற்றை அறியாதவர்களாக இத்தந்தைமார் இருந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட தந்தை இருப்பதில் எவ்விதப் பயனுமில்லை. இவர்கள் இருப்பதைவிட இல்லாமல் பிள்ளைகள் அநாதையாக வளர்வது சிறந்தது.

ولا حول ولا قوة إلا بالله.

நூல்:
அல்ஹுதபுல் மின்பரிய்யா: 7/233