தொழுகையின் பின் ஓதப்படக்கூடிய துஆக்களை பள்ளிவாசலில் கொழுவுவதின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

வினா: சில பள்ளிவாசல்களில் தொழுகைக்குப் பின்னால் கூறப்பட வேண்டிய துஆக்களை எழுதப்பட்ட பலகைகளில் தொழுகையாளிகளுக்கு முன்னால் தொங்கவிடுவது பரவலாகிவிட்டது, அதன் சட்டம் என்ன?

விடை: என்னுடைய சகோதரர்களே! பள்ளிவாசல்களில் எழுதுவதும் பள்ளிவாசல்களில் எழுதியவற்றைக் கொழுவி வைப்பதும் கூடாது. இது எந்தவிதப் பயனும் இல்லாத, தடுக்கப்பட்ட, தொழுகையாளிகளின் கவனத்தைத் திருப்பக்கூடிய ஒன்றாகும். அறிவைக் கற்றுக்கொடுப்பது இவ்வாறல்ல. அறிவைக் கற்றுக்கொடுப்பது சுவரொட்டிகளைக் கொண்டுமல்ல. அறிவைக் கற்றுக்கொடுப்பது பாடங்கள், உரைகள், அறிவு சார்ந்த சபைகள் ஆகியவற்றைக் கொண்டே அமைகின்றது. ஒட்டப்படக்கூடிய சுவரொட்டிகளைக் கொண்டல்ல. இவ்வாறான சுவரொட்டிகள் மற்றும் கொழுவப்பட்டவைகள் பள்ளிவாசலில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

-     அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ்

தமிழாக்கம்: Asky Ibnu Shamsil Abdeen