தம்மாஜிலுள்ள அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தினருக்கு எதிராக ஷீயாக்களின் ராபிழாப் பிரிவினுடைய வெறியாட்டமும் ஊடகங்களின் அசமந்தப்போக்கும்

بسم الله الرحمن الرحيم

இஸ்லாம் என்ற இறையொளி எப்போது இவ்வுலகிலே சுடர்விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்ததோ அன்று முதல் மறுமை நாள் நிகழும் வரை அவ்வொளியை ஊதி அனைத்துவிடுவதற்கான பாரிய முயற்சிகளும் பல்முனைப் போராட்டங்களும் நடந்தேறியுள்ளதையும் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதையும் அவதானிக்க முடிகிறது.

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்: அவர்கள் தமது வாய்களால் அல்லாஹ்வின் ஒளியை அனைத்து விட விரும்புகின்றனர். நிராகரித்தவர்கள் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை பரிபூரணப்படுத்தியே தீறுவான். - அஹ்ஸாப்: 8

சத்தியத்திற்கு எதிராக எத்தகைய பெரும் போராட்டங்களும் அடக்கு முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் அது அணைந்துவிடாமல் எதிர்த்துப் போராடுகின்ற ஒரு கூட்டம் இறுதி நாள் வரைக்கும் வெற்றி பெற்றவர்களாகவே இருப்பார்கள் என்ற சுபசெய்தியையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருக்கின்றார்கள்.

இஸ்லாம் எதிர் கொண்ட போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்ற போது இரு வேறுபட்ட எதிரிகளுக்கு அது முகம் கொடுத்திருக்கின்றது. ஒன்று இஸ்லாத்தை வெளிப்படையாக நிராகரித்து அதற்கெதிராக வெளிப்படையாகவே போராடியவர்கள், இரண்டாவது இஸ்லாமிய வேடம் தரித்து இஸ்லாமிய வட்டத்திற்குள் இருந்து போராடியவர்கள்.

இவ்விரு சாராரிலும் நயவஞ்சக வேடம் தரித்து இஸ்லாத்திற்குள் இருந்து குழிபறித்த இரண்டாவது சாரார்தான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அதிபயங்கரமான எதிரிகளாவார்கள். காரணம் அவர்கள் எதிரிகள் என்பதை இஸ்லாமிய உம்மத்தின் பெரும்பான்மை புரிந்து கொள்ளாமை, அடுத்தது இஸ்லாம் என்று கூறி அவர்கள் வைத்த நச்சுப்பொறியில் சிக்கிக்கொண்டமை.

இவ்வகை எதிரிகளின் பட்டியளில் முதன்மை இடத்தைவகிக்கும் ஒரு கூட்டம் தான் அர்ராபிழா என்று அழைக்கப்படும் ஷீஆக்களின் படுமோசமான ஒரு பிரிவினர். சகாபாக்களுடைய காலம் தொட்டு உருவான இக்கூட்டம் அதனுடைய இன்றைய தாய்மடியாக ஈரானை கொண்டியங்குகிறது. ஈரானின் நிகழ்ச்சி நிரல்களையும் முழு இஸ்லாமிய உலகையும் தனது உள்ளங்கைக்குள் கொண்டுவரும் கனவுகளையும் செவ்வனே நிறைவேற்ற உடம்பில் பரவுகின்ற புற்று நோயைப் போன்று முஸ்லிம்கள் வாழுகின்ற எல்லாப் பிரதேசங்களிலும் காலூன்றியுள்ளார்கள்.

இத்திட்டங்களில் ஓர் அங்கம் தான் யமன் நாட்;டின் ஓரு வரப்பிரசாதமாய் கருதப்படுகின்ற தம்மாஜ் எனும் கிராமத்தின் மீதும் அதில் வாழுகின்ற அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மீதும் அந்த இரத்த வெறிகொண்ட ராபிழாக்கள் மேற்கொண்டு வரும் இனச்சுத்திகரிப்பாகும். தம்மாஜ் எனும் கிராமத்தைப் பொருத்தவரையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் யமன் நாட்டின் அல்லாமா என்று போற்றப்படும் இமாம் முக்பில் இப்னு ஹாதீ அல்வாதிஈ அவர்களின் மகத்தான அழைப்புப் பணிக்கு அல்லாஹுத்தஆலா வழங்கிய ஓர் ஈமானிய கிராமமாகும். ஸைதிய்யா என்ற ஷீயாக்களின் ஒரு பிரிவினராக இருந்த அவ்வூர் மக்கள் அல்லாமா முக்பிலுடைய தூய்மையான அழைப்பின் காரணமாக அஹ்லுஸ்ஸுன்னாவுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள்.

இஸ்லாத்தின் தூது உலகின் நாளாபக்கங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தாருல் ஹதீஸ் என்ற ஒரு இஸ்லாமியக் கலாசாலையை உருவாக்கிய போது சத்தியத்தைத் தேடும் கூட்டம் நாளுக்குநாள் வந்து சேர்ந்து கொண்டே இருந்தது. தனது மரணத்தருவாயில் கலாசாலையை தலைமையேற்று நடாத்தும் பொறுப்பை அல்லாமா யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இறையழைப்பிற்கு பதில் சொன்னார்.

அன்று முதல் இன்று வரைக்கும் பல தசாப்தங்களைக் கடந்து வந்த அக்கலாசாலை பன்மடங்கு வியாபித்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் அறிவுத் தாயகமாகத் திகழ்ந்துவருவது மாத்திரமின்றி இஸ்லாமிய உலகிற்கு அரும் பொக்கிஷங்களை பெற்றுக் கொடுக்கின்ற ஆலிம்களையும் அழைப்பாளர்களையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற எந்த இயக்கத்தினரையும் தமது தந்திரோபாய உத்திகளால் மடக்கிப்படித்து மடியவைத்தாலும் அவைகள் இந்தக் கூட்டத்தாரிடம் எடுபடப்போவதில்லை என்பதையும் தமது நிகழ்ச்சி நிரல்களை முதற்கொண்டு செல்லும் பாதையிலுள்ள ஒரே தடைக்கல் இவர்கள் தான் என்பதையும் ஆழ அகலப்புரிந்து கொண்ட ராபிழாக்கள் இவர்களை வேரடி மண்ணோடு கிள்ளியெறிவதைத் தவிர வேறுவழியில்லை என்பதிலும் தெளிவோடு இருக்கின்றார்கள்.

ஆகவே, தான் கடந்த காலங்களில் பலதடவைகள் தம்மாஜ் வாழ் மக்களுக்கும் அதில் கல்வி பயிலும் மாணவர்களுக்குமெதிராக மூச்சிரைக்கும் முற்றுகைகள் பல மேற்கொண்டு ஆயுதப் போராட்டங்கள் மூலம் பல அப்பாவி முஸ்லிம்களது உயிர்களைக் காவு கொண்டுள்ளனர்.

அத்தகைய மிலேச்சத்தனங்களின் அதிபயங்கர வடிவம்தான் தம்மாஜிக்கெதிராக தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள முற்றுகையும் பயங்கர ஆயுதத்தாக்குதல்களுமாகும். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்ட முற்றுகையும் அதி நவீன ஆயுதத்தாக்குதல்களும் 65 ம் நாளான இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. வெளியிலிருந்து எந்த ஓர் உணவோ மருந்தோ உதவிக்கரமோ செல்ல முடியாதவாறு தம்மாஜைச்சூழ உள்ள மலைகளில் ராபிலாக்கள் முகாமிட்டிருக்கின்றார்கள். அத்தோடு நில்லாமல் பயங்கர மற்றும் சாதாரண ரொக்கெட் பீரங்கி, பல்குழல் எறிகணை போன்ற நவீன ஆயுதங்களால் குண்டு மழை பொழிந்தும் வருகின்றார்கள்.

ஈரானுடைய நேரடி அனுசரணையுடனும் அமெரிக்க இஸ்ரேலின் மறைமுக ஆதரவுடனும் நடைபெறும் அந்த யுத்தத்தின் மூலம் மனிதாபிமானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத யூதர்களையும் தாம் மிஞ்சி விட்டோம் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளார்கள். தம்மாஜில் ஓர் இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டு அக்கிராமத்தை நிர்மூலமாக்குவதே இவர்களுடைய குறிக்கோள் என்பதை இவ்வடக்குமுறையை அவதானிக்கும் போது புரிந்து கொள்ளலாம். ஆனால், சத்தியத்தின் குரல்வளையை நெரித்து அதன் சுடரை வாய்களால் அனைத்து விட முடியாது என்பது அல்லாஹுத்தஆலாவுடைய நியதியும் உண்மையான ஒவ்வொரு முஸ்லிமினது அசைக்க முடியாத நம்பிக்கையுமாகும். இத்தகைய மூச்சுத்திணறும் முற்றுகையால் அக்கிராமத்திலே பல்வேறு மனித அவலங்களும் அரங்கேறிவருகின்றன.

பயங்கர ஆயுதங்களின் இடைவிடாத தாக்குதல்கள், பட்டினியால் வாடும் பச்சிளம் குழந்தைகள், கற்பந்தரித்து பீதியோடு காலம் கடத்தும் கர்ப்பினிகள் பதுங்கு குழிகளிலேயே தமது பிள்ளைகளை ஈன்றெடுக்கும் தாய்மார்கள், ஷஹீதாக்கப்பட்டும் அடக்கம் செய்ய முடியாத நிலையில் அங்குமிங்குமாகப் பிரேதங்கள், ஆபத்தான நிலையில் காயங்களோடு உயிருக்குப் போராடும் ஜீவன்கள், பதுங்கு குழிகளைவிட்டு வெளியேர முடியாத அப்பாவிகள், இவையனைத்திற்கும் மேலாக தண்ணீரின்றி தவிக்கும் அவலங்கள் ...

ராபிழாக்களின் மிலேச்சத்தனமான தாக்குதலில் இறையில்லங்கள், நூலகங்கள் மாணவர்களின் விடுதிகள், ஆசியர்களின் வீடுகள் என அனைத்தும் குறிபார்க்கப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளன. இதுவரைக்கும் சுமார் 150 வரையான தம்மாஜ் வாழ் முஸ்லிம்கள் ஷஹீதாகப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கும் அதிமான மாணவர்கள் சிறிய பெறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள். அவர்களில் அதிகமானவர்கள் நிராயுதபாணிகளான அப்பாவி மக்களே! ஒப்பீட்டு ரீதியில் பார்க்கின்ற போது இந்தப் போராட்டத்திற்கு ஆளாகி அதிக உயிர்ப்பலி கொடுத்தவர்கள் ராபிழாக்கள் என்பது ஆச்சிரியமான ஒன்றாகும். தம்மிடமிருக்கும் சாதாரண ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்லாம் போதிக்கும் யுத்த தர்மங்களைக் கடைபிடித்து மேற்கொள்ளும் எதிர் தாக்குதலில் பலநூறு ராபிழாக்கள் பலியாகியுள்ளார்கள் என்பது அல்லாஹ்வின் பேருதவியென்றே கருத வேண்டும். இதுவல்லாத அதிசய நிகழ்வுகளும் அப்போரின் போதும் இதற்கு முன்னைய போரிலும் நிகழ்ந்துள்ளதை களமுனையில் நின்ற சகோதரர்கள் சொல்லியும் எழுதியுமுள்ளார்கள். ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவி செய்து இன்னும் உங்கள் பாதங்களையும் இஸ்தீரப்படுத்துவான் என்பது இறைவாக்கல்லவா?       - முஹம்மத்: 7

இத்தனை நிகழ்வுகளுக்கும் மத்தியில் ஒவ்வொரு முஸ்லிமும் தன் புருவங்களை அகல விரித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்திடும் விடயம் யாதெனில் யமன் நாட்டின் அரசாங்கமும் அதன் இராணுவமும் கைகட்டி பார்வை தாழ்த்தி மௌனித்து வேடிக்கை பார்ப்பதாகும். மற்றொரு புறத்தில் மனித உரிமை அமைப்புக்களும் ஊடகங்களும் இந்த அவலங்கள் குறித்து அலட்டிக் கொள்ளாதிருப்பது அவற்றின் கபடத்தனங்களை வெளிக்காட்டுகின்றது. பல உயிர்கள் பலியாக்கப்பட்டு சொத்துக்கள் அழிக்கப்பட்டு பல பாகங்களிலிருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட பிற்பாடுதான் ஏதோ கடமைக்காக மத்திய இராணுவத் தலையீடு செஞ்சிலுவைச் சங்கம் என கண்விழித்துக் கொண்டுள்ளன.

இதே வேளை, தற்போது தம்மாஜிக்கு வெளியில் வாழுகின்ற அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த பல கோத்திரங்கள் சேர்ந்து ராபிழாக்களுடைய மாகாணமாகிய ஸஃதாவை முற்றுகையிட்டு பல பாகங்களாலும் தாக்குதல் தொடுத்து தமது சகோதரர்களுக்காக கைகோர்த்துள்ளன. பாதிக்கப்பட்ட மற்றும் போர் முனையில் உள்ள சகோதரர்களுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் கொடுத்துள்ளது.

தம்மாஜின் முற்றுகையை வாபஸ் பெரும் வரை தமது முற்றுகையை கைவிடமாட்டோம் என்ற அவர்களின் நிலைப்பாடு ராபிழாக்களை நிலைகுலையவைத்துள்ளது. அதன் ஓரு வெளிப்பாடே சில தினங்களாக கண்ணி வெடிகளை பொருத்துகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடும் போது அவர்கள் மீது வெடித்த ஒரு கண்ணிவெடி சுமார் 60 பேரின் உயிர்களை பறித்தது. இது அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு கொடுத்த சன்மானமாகும். எவன் எனது ஒரு நேசனை எதிர்க்கின்றானோ அவனுக்கொதிராக நான் போர்ப்பிரகடனம் செய்துவிட்டேன் என்பது அல்லாஹ்வின் எச்சரிக்கையாகும்.

எமது நாட்டின் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தின் ஊடகங்கள் நடந்து கொள்ளும் சந்தர்ப்பவாத ஊடகப்பணியின் காரணமாக இவ்வளவு பெரிய அவலங்களைக் கூட முஸ்லிம் சமுகத்திற்கு கொண்டு சேர்க்காமல் இருப்பது இத்தகைய ஒரு கட்டுரையை வரைவதற்கான நோக்கமாகும்.

உலகின் எந்த மூலை முடுக்குகளிலும் சரி தமது கழுகுப்பார்வையால் நோக்கி முண்டியடித்து தகவல் சேர்த்து வெளியிடுவதில் மும்முரமாக ஈடுபடும் இவ்வூடகங்கள் இத்தகைய மனிதப் படுகொலைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது அவைகளின் கபடத்தனத்திற்கு சிறந்த சான்றாகும்.

அறிந்து கொள்! இந்த சமுதாயம் ஒன்று சேர்ந்து உமக்கு ஒரு தீமை செய்ய நாடினாலும் அல்லாஹ் எழுதிவைத்த ஒன்றைக் கொண்டே அன்றி தீங்கு செய்யமாட்டார்கள் என்ற இறுதித்தூதரின் வாக்கு எல்லா ஆயுதங்களை விடவும் ஊடகங்களை விடவும் ஒவ்வொரு முஃமினுடைய உள்ளத்திற்கும் தைரியத்தையும் ஆறுதலையும் வழங்குகின்றது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இன்னும் நீங்கள் பலவீனப்பட்டு கவளைப்பட்டு விடாதீர்கள். விசுவாசிகளாக இருந்தால் நீங்களே மேலானவர்கள். - ஆலஇம்றான்: 139

By: Abu Ubaidillah Silmy Ibnu Shamsil Abdeen