தப்லீக் ஜமாஅத் ஒரு விமர்சனப் பார்வை! – 01

بسم الله الرحمن الرحيم

இன்று இலங்கை மண்ணில் பெரும்பான்மை மக்களை உள்ளடக்கிய ஒரு ஜமாஅத் இருக்குமானால் அது தப்லீக் ஜமாஅத் என்று சொன்னால் மிகையாகாது. சத்தியத்திற்காகப் போராடும் உற்சாகமும், இஸ்லாத்தை வளர்க்க தமது சொத்துக்களையும், நேரங்களையும் ஒதுக்கும் கூட்டமாக இதை விட வேறெதுவும் கிடையாது என்ற விடயம் அன்று முதல் இன்று வரை ஆழமாக பதியப்பட்டடுள்ளது.

எனவேதான், இந்த தப்லீக் ஜமாஅத் பற்றிய உண்மை நிலையை தெளிவுபடுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் இஹ்லாஸ் எனும் மனத்தூய்மையை தந்தருள்வானாக!

1. இந்த ஜமாஅத்தின் இஸ்தாபகர் பற்றிய சிறுகுறிப்பு.

இந்த ஜமாஅத்தின் இஸ்தாபகராக முஹம்மத் இலியாஸ் என்பவரே கருதப்படுகின்றார். இவரது தந்தையின் பெயர் அஷ்ஷேஹ் முஹம்மத் இஹ்மாயில். இவர் ஹி: 1303ல் இந்தியாவில் பிறக்கிறார். இவர் பிறந்த சுழல் ஜிஸ்திய்யா எனும் ஸூபிச தர்க்காக் கொள்கையைக் கொண்டதாக காணப்பட்டதால் அவரும் அக்கொள்கையை தனது கொள்கையாக மாற்றிக் கொண்டார். அத்துடன், தனது கல்வியை பிரபல்யம் பெற்ற தேவபந்த் என்ற ஊரில் உள்ள மத்ரஸாவில் பெற்றுக்கொண்டார். (ஜமாஅதுத் தப்லீக், அஷ்ஷேஹ் ஸையித் தாலிப் ரஹ்மான்)

2. ஜமாஅத்தின் உருவாக்கம்.

அஷ்ஷேஹ் ஸைபுர் ரஹ்மான் அத்தஹ்லவி அவர்கள் கூறுகின்றார்கள்:

'இந்த ஜமாஅத் உருவான வரலாற்றை பார்க்கும் போது முஹம்மத் இலியாஸ் அவர்கள் மக்களை மார்க்கத்தின்பால் அழைப்பு விடுப்பதில் மிக விவேகமானவராக காணப்பட்டார் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனாலும், ஓர் அழைப்பாளனிடம் கட்டாயம் இருக்கவேண்டிய அறிவு அவரிடம் இருக்கவில்லை. அத்துடன் அவரின் அழைப்புப்பணி ஸூபிச தரீக்கத்தின் பாலே காணப்பட்டது. தில்லி மாநிலத்தை அன்றியுள்ள ஒரு பிரதேசத்தில் மேவாத் என்று சொல்லப்படும் ஒரு குலத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தனர். இஸ்லாத்தை பற்றிய எவ்வித அறிவும் இவர்களிடம் இருக்கவில்லை. இஸ்லாமிய குடு;ம்பத்தில் பிறந்ததும், இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொண்டதுமேயன்றி எவ்வித அமலும் இவர்களிடம் காணப்படவில்லை. நெருப்பையும், சிலைகளையும் வணங்குபவர்களுடன் கூட்டாக இவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். எனவே, இவ்விடயத்தில் ரோஷம் கொண்ட முஹம்மத் இலியாஸ் அவர்கள் தனது ஆசிரியர்களான அஷ்ஷேஹ் ரஷீத் அஹ்மத், அஷ்ஷேஹ் அஷ்ரப் அலி அத்தஹானவி போன்றவர்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த ஜமாத்தை ஆரம்பித்தார்". (நழ்ரதுன் ஆபிரா இஃதிபாரிய்யா: 7 – 8)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

- அபூ அப்திர் ரஹ்மான் அஸ்ஹர் (மதனி)