சொத்தை விற்று ஹஜ் செய்யலாமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: வீடு, பூமி போன்ற அசையாச் சொத்துக்களைத் தன்வசம் வைத்திருப்பவர் அவற்றை விற்று ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியுமா?

பதில்: இமாம் இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்முங்னி (5/12) எனும் தன்னுடைய நூலில் இது தொடர்பாகக் கூறுகையில்: 'யாரிடத்தில் ஓர் அசையாச் சொத்து இருந்து அது அவரின் வதிவிடத்திற்கு அல்லது அவரின் குடும்பத்தின் வதிவிடத்திற்குத் தேவையுடையதாகக் காணப்பட்டால் அல்லது அவரின் செலவுக்கு அல்லது அவரது குடும்பத்தினரின் செலவுக்குத் தேவையுடையதாகக் காணப்பட்டால் அல்லது அவரிடத்தில் ஒரு பொருள் இருந்து அது எப்போது குறையுமோ அப்போது அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்து தனக்குப் போதுமான வருமானத்தைப் பெற முடியாத நிலை உண்டாகும் என்றிருந்தால் அல்லது கால்நடையிலிருந்து அதனில் அவர் தேவையுடையவராக இருந்தால் (இப்படியான நிலைகளில்) அவருக்கு ஹஜ் கடமையாகாது. அவ்வாறின்றி அவரிடத்தில் அவைகளில் இருந்தும் தனது தேவை போக மேலதிகமான ஓர் அளவு காணப்பட்டால் அதனை அவர் விற்று ஹஜ் செய்வது அவசியமாகும்” என்கிறார்கள்.

-    பத்ஹுல் அல்லாம்: (2/772)

-    தமிழில்: அபூ ஹுனைப்