சிறு பிள்ளைகளுக்கு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி உள்ளதா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: சிறு பிள்ளைகளுக்கு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி உள்ளதா?

பதில்: பிரித்தறிய முடியாத பிள்ளையின் வியாபாரத்தைப் பொருத்தளவில் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதேபோன்று, பிரித்தறியக்கூடிய பிள்ளையின் வியாபார நடவடிக்கைகள் செல்லுபடியாகுமா? என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு காணப்படுகின்றது. அக்கருத்து வேறுபாட்டில் மிகவும் சரியான கருத்து, அத்தகைய சிறுவர்களின் வியாபார நடவடிக்கைகள் செல்லுபடியாகும் என்பதாகும். ஆயினும், அவ்வியாபார நடவடிக்கையானது அப்பிள்ளையின் பொறுப்புதாரரின் அனுமதியுடன், அவர் அனுமதித்தவற்றில் மாத்திரம் மேற்கொள்ளப்பட வேண்டும். இக்கருத்தை இமாம்களான அஹ்மத், இஸ்ஹாக், அபூ ஹனீபா, ஸவ்ரி போன்றோர் கூறியுள்ளனர். எனவே, இத்தகையவர்களின் வியாபாரம் கூடும். ஆயினும், இவர்களின் வியாபாரத்தின் மூலமாக பெரியளவான நஷ்டம் மற்றும் ஏமாற்றம் ஆகியன ஏற்படாமல் இருக்க வேண்டும்.

குறிப்பு: அற்பமான பொருட்களாக இருந்தால் பொறுப்புதாரரின் அனுமதியில்லாமலேயே அவற்றை விற்கவும் வாங்கவும் முடியும் என்ற கருத்தும் சிலரால் கூறப்படுகின்றது.

பார்க்க: அல்முக்னி: 6/347, அல்மஜ்மூஉ: 9/158