கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறீர்களா?!

بسم الله الرحمن الرحيم

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அல்லது காபிா்களின் மதம் சார்ந்த ஏனைய பெருநாள் தினங்களை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது ஏகோபித்த கருத்தின்படி ஹராமானதாகும். ஏனென்றால், அவ்வாறு வாழ்த்துத் தெரிவிப்பதில் அவர்கள் கொள்கையாக ஏற்றிருக்கக்கூடிய குப்ருடைய அடையாளங்களை நாம் அங்கீகரிப்பது, அவர்களுக்காக வேண்டி நாம் அக்குப்ரைப் பொருந்திக் கொள்வது ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படுகின்றன. வாழ்த்துத் தெரிவிப்பவர் அக்குப்ரை தன்னளவில் பொருந்திக் கொள்ளாவிட்டாலும் ஒரு முஸ்லிமுக்கு குப்ருடைய அடையாளங்களை பொருந்திக் கொள்வது அதை முன்னிட்டு பிறருக்கு வாழ்த்துத் தெரிவிப்பது ஹராமானதாகும்.

வழங்கியவர்: அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்

நூல்: மஜ்மூஉ பதவா வரஸாஇல்.

தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்