கடைகள் மூடப்பட்டன, ஆனால் பெருநாள் தினமல்ல!

بسم الله الرحمن الرحيم

ஹபீப் அல்ஆபித் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

நான் பஸராவுக்குச் சென்றேன். அங்கே உள்ள கடைகள் மூடப்பட்டு இருந்தன. அப்போது நான் சிலரிடம் "இன்று உங்களுக்கு நான் அறிந்திராத ஒரு பெருநாள் தினமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்களோ "இல்லை! ஆனால் இன்று அறிஞர் ஹஸனுல்பஸரீ அவர்கள் பள்ளிவாசலில் மக்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருக்கிறார்" என பதிலளித்தார்கள்.

நூல்: அல்மவாஇள் வல்மஜாலிஸ்: 181