எம் முன்னோர்களின் முத்துப் பெட்டகத்திலிருந்து …. 03

بسم الله الرحمن الرحيم

எண்ணிக்கையைப் பார்த்து சத்தியத்தை எடை போடாதீர்கள்!

நேர்வழியைப் பின்பற்று! அதில் செல்வோர் சொற்பம் என்பது உன்னைப் பாதிக்காது, வழிகேட்டைவிட்டும் உன்னை எச்சரிக்கின்றேன்! அதில் அழிந்து போவோர் அதிகம் என்பதால் ஏமாறிவிடாதே!

-     இமாம் புழைல் இப்னு இயாழ் ரஹிமஹுல்லாஹ்

நாம் யாருடன் உட்காரக் கூடாது?

மனோ இச்சையுடையோருடன் உட்காராதீர்கள்! ஏனெனில், அவர்களுடன் உட்காருவது உள்ளங்களை நோயுறச் செய்யும்.

-     அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா

எது உண்மையான ஜமாஅத்?

ஜமாஅத் என்பது சத்தியத்திற்கு உடன்பட்டதாகும், அதில் நீ மாத்திரம் இருந்தாலும் சரியே!

-     அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு

அல்லாஹ்வை மிகவும் அஞ்சுபவர் யார்?

எவர் அல்லாஹ்வை மிகவும் அறிந்தவராக உள்ளாரோ அவர் அவனை மிகவும் அஞ்சுபவராக இருப்பார்.

-     இமாம் அஹ்மத் இப்னு ஆஸிம் அல்அன்தாகி ரஹிமஹுல்லாஹ்

மனிதர்கள் அனைவரையும் திருப்தியடைய வைக்க முடியுமா?

மனிதர்கள் அனைவரையும் திருப்தியடைய வைப்பது அடையமுடியாத ஓர் இலக்காகும்.

-     இமாம் ஷாபிஇ ரஹிமஹுல்லாஹ்