உயிரைக் கைப்பற்றும் வானவர்…

بسم الله الرحمن الرحيم

கேள்வி: உயிரைக் கைப்பற்றும் வானவரின் பெயர் இஸ்ராஈல் என்பது உறுதியான ஒரு தகவலா?

பதில்: அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அகீததுத் தஹாவிய்யா எனும் நூலுக்கு விளக்கக் குறிப்பு வழங்கும் போது இது விடயம் குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “மக்களுக்கு மத்தியில் பரவியிருப்பதைப் போல் அவருக்கு இஸ்ராஈல் என்று பெயர் சூட்டுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை. இது இஸ்ராஈலிய்யத்தான அறிவிப்பைச் சார்ந்ததாகும்.”

மேலும், அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது மார்க்கத் தீர்புத் தொகுப்பில் - 3/161 - கூறும்போது: “அவருடைய பெயர் இஸ்ராஈல் என்பது பிரசித்தி பெற்றுள்ளது. ஆனால், அது சரியான ஒன்றாக இல்லை. இப்பெயரைக் கட்டாயம் நாம் நம்புவதற்கு அவசியமில்லாத இஸ்ராஈலிய்யாத் எனும் செய்திகளில் இவ்விடயம் இடம்பெற்றுள்ளது. மரணத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவரை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் பெயர் குறிப்பிட்டிருப்பதைப் போல் மலகுல் மவ்த் என்றே நாம் பெயர் சூட்டுவோம்” என்கிறார்கள். "நபியே! நீங்கள் கூறுங்கள்: உங்களுக்கு நியமிக்கப்பட்ட மலகுல் மவ்த் உங்களை மரணிக்கச் செய்வார். பின்பு நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் மீட்கப்படுவீர்கள்." (சூரா அஸ்ஸஜ்தா: 11)

-    தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்