இஹ்ராம் அணிந்த பெண்ணுக்கு தனது முகத்தை மறைத்துக் கொள்ள அனுமதி உள்ளதா?

بسم الله الرحمن الرحيم

இது விடயம் குறித்து அல்லாமா இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில்: "நபியவர்களைத் தொட்டும் இஹ்ராம் அணிந்த பெண் தனது முகத்தை மூடுவது ஹராம் என்று எச்செய்தியும் இடம்பெறவில்லை. மாறாக, அவர்கள் தடைசெய்ததெல்லாம் பெண்கள் தங்கள் முகங்களை மறைக்கும் முகமாக முகத்தில் மாத்திரம் ஒரு துணியைக் கட்டிக் கொள்ளும் நிகாப் எனும் எனும் பெயரிலான முகமூடியேயாகும். ஏனெனில், அது முகத்திற்குரிய ஓர் ஆடையாகும். எனவே, நிகாபுக்கும் முகத்தை மறைப்பதற்கும் வேறுபாடு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் இஹ்ராம் அணிந்த பெண் தனது முகத்தை மறைத்தால் அதில் எவ்விதக் குற்றமுமில்லை என்று நாம் கூறுவோம். என்றாலும், அந்நிய ஆண்கள் தன் முன் இல்லாத போது ஒரு பெண் தன்னுடைய முகத்தைத் திறந்து கொள்ளவது மிகச் சிறந்ததாகும். அவ்வாறு அந்நிய ஆண்கள் குறுக்கிட்டால் அவள் அப்போது தன் முகத்தை மறைத்துக் கொள்வது வாஜிப் ஆகும்” என்கிறார்கள். (பத்ஹுல் அல்லாம்: 3/22)

-    தமிழில்: அபூஹுனைப்