இவர்களும் குரைக்கின்ற நாய்களைப் போன்றவர்களா?!

بسم الله الرحمن الرحيم

இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: "(எதையும்) கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மடையனை நீ பொருட்படுத்தாதே! உம்மை அவன் ஏசினாலும், காபிர் என்று கூறினாலும், வழிகேடன் என்று கூறினாலும் அது உம்மைப் பாதிக்காது. ஏனெனில், அவன் குரைக்கின்ற நாயைப் போன்றவனாவான். உம்மைப் பார்த்து அது குரைப்பதற்காக வேண்டி, அதற்கு பதில் கொடுக்கின்ற அளவுக்கு அந்த நாய்க்கு உம்மிடத்தில் எந்தவித மதிப்பையும் வைத்துக்கொள்ளாதே! அவன் குரைத்து மகிழ்வடைகின்றவாறு அவனை நீ விட்டுவிடு! அறிவு, ஈமான், நேர்வழி ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ் (அவனை விட) உம்மை சிறப்பித்துள்ளான் என்று நீ மகிழ்ச்சியடைந்துகொள்! அவனைப் புறக்கணித்து நடந்து கொள்வது அல்லாஹ் உமக்குப் புரிந்த அருட்கொடையாக நினைத்துக்கொள்!"

- நூல்: அஸ்ஸவாஇகுல் முர்ஸலா- (3/1158)