இகாமத்துக்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை வரையறுப்பது சிறந்தது!

بسم الله الرحمن الرحيم

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:  "என்றாலும், மனிதர்களுக்கென்று குறிப்பிட்ட (இகாமத்) நேரத்தை வரையறுப்பது இமாமுக்கு அவசியமாகும். அதன்படி உதாரணமாக, அவர் மக்களை நோக்கி: நான் இந்நேரத்தை விட்டும் தாமதித்தால் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! என்று கூறுவதைப் போன்றாகும். ஏனெனில், இத்தகைய நிலையில் அவர்களுக்கும் இமாமுக்கும் மிக இலகு இருப்பதற்காகவும், மனிதர்கள் சிரமத்தில் அல்லது நெருக்கடியில் விழாமல் இருப்பதற்காகவும் இவ்வாறு கூறப்படுகிறது".

(நூருன் அலத் தர்ப்: 4/167)