அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 12

بسم الله الرحمن الرحيم

எம்மால் மட்டிட முடியாத அழகிய திருநாமங்கள் பல அல்லாஹ்வுக்கு உள்ளன. "நிச்சயமாக அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் இருக்கின்றன. யார் அவைகளைத் தேடிப் பெற்றுக்கொண்டு, (மனனமிட்டு, அவைகள் மூலம் அமல் செய்து, அவைகளைக் கொண்டு பிராத்தனையும் செய்கிறாரோ) அவர் சுவனம் நுளைவார்” என்ற ஹதீஸ் மூலம் நாடப்படும் அல்லாஹ்வின் 99 திருநாமங்கள் இவைகளாக இருக்கும் என்று நாம் அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கின்றோம். அந்த 99 திருநாமங்களும் பின்வருமாறு

05 - اللهُ  ،  الإِلَـهُ  ،  الرَّحْمنُ  ،  الرَّحِـيْـمُ  ،  الـمَـلِـكُ

10 - القُـدُّوْسُ  ،  السَّـلَامُ  ،  الـمُؤْمِنُ  ،  الـمُـهَـيْـمِـنُ  ،  العَـزِيْـزُ

15 - الجَـبَّارُ  ،  المُـتَـكَـبِّـرُ  ،  الـخَـالِـقُ  ،  الـبَـارِئُ  ،  المُـصَـوِّرُ

20 - الـغَـفَّـارُ  ،  الـقَـهَّـارُ  ،  الوَهـَّابُ  ،  الرَّزَّاقُ  ،  الفَـتَّـاحُ

25 - الـعَـلِـيْـمُ  ،  الـقَـابِـضُ  ،  الـبَـاسِـطُ  ،  الْحَافِـظُ  ،  الـرَّازِقُ

30 - الـطَّـيِّـبُ  ،  الـطَّـبِـيْـبُ  ،  الـسَّـمِـيْـعُ  ،  الْـبَـصِـيْـرُ  ،  الْـحَـكَـمُ

35 - الْـقَـدِيْـرُ  ،  الـلَّـطِـيْـفُ  ،  الْـخَـبِـيْـرُ  ،  الْـحَـلِـيْـمُ  ،  الْـعَـظِـيْـمُ

40 - الـغَـفُـوْرُ  ،  الـشَّـكُـوْرُ  ،  الْـعَـلِـيُّ  ،  الْـكَـبِـيْـرُ  ،  الْـحَـفِـيْـظُ

45 - الْـمُـقِـيْـتُ  ،  الْـحَـسِـيْـبُ  ،  الْـجَـمِـيْـلُ  ،  الْـكَـرِيْـمُ  ،  الـرَّقِـيْـبُ

50 - الْـمُجِـيْـبُ  ،  الـوَاسِـعُ  ،  الْـحَـكِـيْـمُ  ،  الْـوَدُوْدُ  ،  الْـمَـجِـيْـدُ

55 - الـرَّفِـيْـقُ  ،  الـشَّـهِـيْـدُ  ،  الْـحَـقُّ  ،  الْـوَكِـيْـلُ  ،  الْـقَـوِيُّ

60 - الْـمَـتِـيْـنُ  ،  الْـوَلِـيُّ  ،  الْـحَـمِـيْـدُ  ،  الْـخَـلَّاقُ  ،  الْـمُـسَـعِّـرُ

65 - الْـمُـحِـيْـطُ  ،  الـرَّبُّ  ،  الْـمُـبِـيْـنُ  ،  الْـحَـيُّ  ،  الْـقَـيُّـوْمُ

70 - الْـقَـاهِـرُ  ،  الْـعَـالِـمُ  ،  الْـوَاحِـدُ  ،  الْأَحَـدُ  ،  الـصَّـمَـدُ

75 - الْـقَـادِرُ  ،  الْـمُـقْـتَـدِرُ  ،  الْـمُـقَـدِّمُ  ،  الْـمُـؤَخِّـرُ  ،  الْأَوَّلُ

80 - الْآخِـرُ  ،  الـظَّاهِـرُ  ،  الْـبَـاطِـنُ  ،  الـشَّـافِـيْ  ،  الْـمُـتَـعَـالُ

85 - الْـبَـرُّ  ،  الـتَّـوَّابُ  ،  الْـمَـنَّـانُ  ،  الْـمُـسْـتَـعَـانُ  ،  الْـعَـفُـوُ

90 - الـرَّءُوْفُ  ،  الـمَـالِـكُ  ،  الْأَكْـرَمُ  ،  الْـخَـيْـرُ  ،  الْـقَـرِيْـبُ

95 - الْـغَـنِـيُّ  ،  الْأَعْـلَـى  ،  الْـمُـعْـطِـيْ  ،  الْـمَـلِـيْـكُ  ،  الـسَّـيِّـدُ

99 - الـشَّـاكِـرُ  ،  الـنُّـوْرُ  ،  الـسُّـبُّـوْحُ  ،  الْـوِتْـرُ

அல்லாஹ்வின் பண்புகள் இருவகைப்படும்

01-   அல்லாஹ் தனக்கு இருப்பதாக உறுதிப்படுத்திய பண்புகள். இதற்கு அரபியில் صِفَاتٌ ثُـبُوْتِـيَّـةٌ என்று கூறப்படும். இது மூன்று வகைப்படும்.

02-   அல்லாஹ் தனக்கு இல்லையென்று மறுத்த பண்புகள். இதற்கு அரபியில் صِفَاتٌ سَلْبِيَّةٌ என்று கூறப்படும்

அல்லாஹ் தனக்கு இல்லையென்று மறுத்த இவ்வகையின் ஒவ்வொரு பண்பும் இரண்டு விடயங்களைப் பொதிந்திருக்கும்.

01-   அப்பண்பை நாம் அல்லாஹ்வுக்கு மறுத்தல்.

02-   அப்பண்பின் எதிர் பண்பை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தல்.

அல்லாஹ் தனக்கு இல்லை என்று மறுத்த பண்புகள்

01.    மரணமடைதல்

அல்லாஹ் தனக்கு இல்லையென்று மறுத்த பண்புகளில் "மரணமடைதல்” என்ற பண்பைக் குறிப்பிடலாம். இப்பண்பை அல்லாஹ்வுக்கு மறுக்கும் போது, "மரணிக்காத உயிருடன் இருப்பவனின் மீது நீ பொருப்புச் சாட்டுவீராக!” (ஸுரதுல் புர்கான்: 58) என்ற வசனத்தின் அடிப்படையில் மறுக்க வேண்டும்.

எனவே, நாமும் அல்லாஹ்வுக்கு "மரணமடைதல்” என்ற பண்பை மறுத்து, அப்பண்பின் எதிர் பண்பான, "எப்போதும் உயிருடன் இருக்கிறான்” என்ற பண்பை அவனுக்கு உறுதிப்படுத்துவோம்.

02.    மடமை, மறதி

அல்லாஹுத்தஆலாவுக்கு மடமை, மறதி இல்லை என்பது பற்றி நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்  பின்வருமாறு கூறுகின்றார்கள்:  "என் ரப்பு தவறவிடவும் மாட்டான், மறந்துவிடவும் மாட்டான்”. இவ்வார்த்தையை அல்லாஹ்வும் தனது திருமறையில் அங்கீகரித்துக் கூறியுள்ளான். (ஸுரா தாஹா: 52)

எனவே, நாமும் அல்லாஹ்வுக்கு மடமை ஏற்படமாட்டாது என்று நம்பி அப்பண்பின் எதிர் பண்பான, அனைத்தையும் அறிவான் என்ற பண்பை அவனுக்கு உறுதிப்படுத்துவோம்.

இப்படி அல்லாஹ் தன்னைவிட்டும் மடமையை மறுத்திருப்பது அல்லாஹ்வின் அறிவின் பூரணத்துவத்தின் காரணமாகவேயாகும். அல்லாஹ்வின் அறிவு படைப்புகளின் அறிவைப் போன்றதல்ல. படைப்பின் அறிவு முதலில் மடமையில் இருந்து பின்பு தேடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

ஆனால், அல்லாஹ்வின் அறிவைப்பொறுத்தவரை அவனின் அறிவுக்கு முன் மடமை என்ற ஒன்று கிடையவே கிடையாது. அவன் நடந்து முடிந்தவையையும் அறிகிறான், நடந்து கொண்டிருப்பதையும் அறிகிறான், நடக்க இருப்பதையும் அறிந்தவனாக இருக்கிறான். அவனின் அறிவின் விசாலத்தின் காரணமாகவே அல்லாஹ் தன்னைவிட்டும் மடமை என்ற பண்பை மறுத்திருக்கிறான். இவ்வாறே நாமும் நம்புவோம்.

03 - இயலாமை

இந்த இயலாமை என்ற பண்பைப் பொறுத்தவரை அல்லாஹ் தனக்கு இல்லையென்று மறுத்த பண்புகளில் ஒன்றாகும். இது பற்றி அல்லாஹ் ஸூரா பாதிர்: 44ல் கூறும் போது: 'தமக்கு முன்பிருந்தவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்க வேண்டாமா? அவர்கள் இவர்களைவிட மிக பலமிக்கவர்களாக இருந்தனர். (என்று கூறிவிட்டு) வானங்களிலோ பூமியிலோ இருக்கும் எந்தவென்றாலும் அல்லாஹ்வை தோற்கடிக்க, இயலாமையில் ஆக்க முடியாது” என்று கூறுகிறான்.

இப்படி அல்லாஹ் கூறிவிட்டு காரணத்தைக் கூறும்போது தொடர்ந்து இவ்வாறு கூறுகிறான்: "நிச்சயமாக அவன் நன்கறிந்தவனும் பேராற்றலுடையவனுமாக இருக்கிறான்” என்று கூறுகிறான். ஆக அல்லாஹ்வுக்கு இயலாத ஒன்றும் இல்லை. ஏனெனில், அவன் பேராற்றல் உடையவனும் பலம் மிக்கவனும் விசாலமான அறிவுடையவனுமாவான்.

-     இன்ஷா அல்லாஹ் தொடரும்

-     அஹ்ஸன் இப்னு ஷம்சிலாப்தீன்