அல்கவாஇதுல் அர்பஉ தமிழாக்கம் – 01

بِسْــــــمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيـــــمِ

أَسْأَلُ اللهَ الْكَرِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَتَوَلاكَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَأَنْ يَجْعَلَكَ مُبَارَكًا أَيْنَمَا كُنْتَ، وَأَنْ يَجْعَلَكَ مِمَّنْ إِذَا أُعْطِيَ شَكَرَ، وَإِذَا ابْتُلِيَ صَبَرَ، وَإِذَا أذَنبَ اسْتَغْفَرَ. فَإِنَّ هَؤُلاءِ الثَّلاثُ عُنْوَانُ السَّعَادَةِ.

اعْلَمْ أَرْشَدَكَ اللهُ لِطَاعَتِهِ: أَنَّ الْحَنِيفِيَّةَ مِلَّةُ إِبْرَاهِيمَ: أَنْ تَعْبُدَ اللهَ، وَحْدَهُ مُخْلِصًا لَهُ الدِّينَ، كَمَا قَالَ تَعَالَى: وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإِنسَ إِلاَّ لِيَعْبُدُونِ  الذاريات: 56

فَإِذَا عَرَفْتَ أَنَّ اللهَ خَلَقَكَ لِعِبَادَتِهِ؛ فَاعْلَمْ أَنَّ الْعِبَادَةَ لا تُسَمَّى عِبَادَةً إِلا مَعَ التَّوْحِيدِ، كَمَا أَنَّ الصَّلاةَ لا تُسَمَّى صَلاةً إِلا مَعَ الطَّهَارَةِ، فَإِذَا دَخَلَ الشِّرْكُ فِي الْعِبَادَةِ فَسَدَتْ، كَالْحَدَثِ إِذَا دَخَلَ فِي الطَّهَاَرِة، فَإِذَا عَرَفْتَ أَنَّ الشِّرْكَ إِذَا خَالَطَ الْعِبَادَةِ أَفْسَدَهَا، وَأَحْبَطَ الْعَمَلَ، وَصَاَر صَاحِبُهُ، مِنَ الْخَالِدِينَ فِي النَّارِ. عَرَفْتَ أَنَّ أَهَمَّ مَا عَلَيْكَ مَعْرِفَةُ ذَلِكَ لَعَلَّ اللهَ أَنْ يُخَلِّصَكَ مِنْ هَذِهِ الشَّبَكَةِ، وَهِيَ الشِّرْكُ بِاللهِ الَّذِي قَالَ الله تَعَالَى فِيهِ: إِنَّ اللّهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ النساء: 116.  وَذَلِكَ بِمَعْرِفَةِ أَرْبَعِ قَوَاعِدَ ذَكَرَهَا اللهُ تَعَالَى فِي كِتَابِهِ.

மகத்துவம் மிக்க அர்ஷின் இரட்சகனாகிய சங்கையான அல்லாஹ்விடம் உன்னை உலகத்திலும் மறுமையிலும் பொறுப்பேற்குமாறும் நீ எங்கிருந்த போதிலும் பரகத் செய்யப்பட்டவனாக உன்னை ஆக்குமாறும் கொடுக்கப்பட்டால் நன்றி செலுத்தக்கூடியவனாகவும், சோதிக்கப்பட்டால் பொறுமை செய்யக்கூடியவனாகவும், பாவம் செய்தால் பாவமன்னிப்புக் கோரக்கூடியவனாகவும் உன்னை ஆக்குமாறு நான் கேட்கின்றேன். நிச்சயமாக இந்த மூன்று விடயங்களும் சந்தோஷத்தின் விலாசமாகும்.

அறிந்துகொள்! அவனுக்கு வழிப்படுவதற்காக வேண்டி அல்லாஹ் உனக்கு நேர்வழிகாட்டுவானாக! நிச்சயமாக ஹனீபிய்யாவாகிறது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கமாகும்: அது - பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போன்று - நீ அல்லாஹ் ஒருவனை மாத்திரம் அவனுக்குக் கட்டுப்பட்டு தூய்மையான நிலையில் வணங்குவதாகும்.

நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை.

-     அத்தாரியாத்: 56

நிச்சயமாக அல்லாஹ் உன்னைப் படைத்தது அவனை வணங்குவதற்காகவே என்பதை நீ அறிந்தால் எவ்வாறு சுத்தமின்றி தொழுகை தொழுகை என்று பெயர் கூறப்படமாட்டாதோ அதேபோல் ஒருமைப்படுத்துவதின்றி வணக்கம் வணக்கம் என்று பெயர் கூறப்படமாட்டாது என்று நீ அறிந்துகொள்!

சுத்தத்தின் போது தொடக்கு ஏற்பட்டு அது கெட்டுவிடுவதைப் போன்று வணக்கத்தில் இணைவைப்பு நுழைந்தால் அதுவும் கெட்டுவிடும்.

நிச்சயமாக இணைவைப்பு வணக்கத்துடன் கலந்தால் அதனை அது கெட்டுவிடச் செய்யும், இன்னும் அமல்களை அழித்துவிடும், அதனைச் செய்பவன் நரகத்தில் நிரந்தரமாக இருப்பவனாக மாறிவிடுவான் என்பவற்றை நீ அறிந்தால் உனக்கு கடமையான முக்கியமான விடயம் அது பற்றித் தெரிந்து கொள்வதாகும் என்பதை நீ அறிந்து கொள்வாய்! - அதன் மூலம் - இந்த வலையிலிருந்து அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அதுவே அல்லாஹ் விபரிக்கும் அவனுக்குச் செய்யும் இணைவைப்பாகும்.

நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். அது அல்லாதவற்றை தான் நாடியவனுக்கு மன்னிப்பான்.

-     அந்நிஸா: 48

மேலும் அதுவே அல்லாஹ் தனது வேதத்தில் குறிப்பிட்டிருக்கும் நான்கு கோட்பாடுகளை அறிவதைக் கொண்டு அமைந்திருக்கும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்