அதிக எண்ணிக்கையில் படிப்பினை கிடையாது!

بسم الله الرحمن الرحيم

அல்லாமா ஸாஹிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "படிப்பினை என்பது அதிக தொகையில் அல்ல. படிப்பினையானது சரியான முடிவைக் கொண்டும், சத்தியத்தை அடைதலைக் கொண்டும் தான் இருக்கிறது. ஆம். அதிகளவான தொகையானது சரியான கருத்துடன் இருக்குமானால் அது நல்லது. என்றாலும், அல்லாஹ்வின் வழிமுறை நிச்சயமாக அத்தொகையானது அசத்தியத்துடன் தான் இருக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்: நீர் (எவ்வளவு தான்) வேராவல் கொண்டாலும் (அம்)மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வை) விசுவாசம் கொள்பவர்களாக இல்லை. (யுஸுஃப்: 103)

மேலும் கூறுகின்றான்: மேலும், இப்புவியிலிருப்போரில் பெரும்பாலோருக்கு (அவர்களின் கூற்றை ஏற்று) நீர் கீழ்படிந்து நடந்தால், அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (திருப்பி) வழி கெடுத்துவிடுவார்கள். (அல் அன்ஆம்: 116)"

- ஷர்ஹ் மஸாஇலில் ஜாஹிலிய்யா, பக்கம்: 60