لا حول ولا قوة إلا بالله என்ற வார்த்தையைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! – 02

بسم الله الرحمن الرحيم

ஹவ்கலாவுடைய பிரயோசனங்கள்

ஹவ்கலாவுக்கென்று தனியான பிரயோசனங்கள் பல உள்ளன. அவற்றை பின்வருமாறு இனங்காட்டலாம்.

  1. சுவனத்தின் பொக்கிஷங்களில் ஒன்றாகும்.

நபியவர்கள் அபூ மூஸா அல்அஷ்அரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை நோக்கி: "கைஸின் மகன் அப்துல்லாஹ்வே! சுவனத்தின் பொக்கிஷங்களில் ஒன்றை உனக்கு அறிவித்துத் தரட்டுமா?" என வினவினார்கள். அதற்கு அவர்: "ஆம்" எனக்கூற,

 لا حول ولا قوة إلا بالله

என்ற வார்த்தையை நபியவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

  1. சுவனத்தின் விளைச்சல்களில் ஒன்றாகும்.

நபியர்கள் கூறினார்கள்: "சுவனத்தின் விளைச்சல்களை அதிகரித்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அதனுடைய நீர் மதுரமானது. மேலும், அதனுடைய மண் வாசனைமிக்கது. எனவே, அதனுடைய விளைச்சல்களை அதிகரித்துக் கொள்ளுங்கள்!" அதற்குத் தோழர்கள்: "அல்லாஹ்வின் தூதரே! அதனுடைய விளைச்சல்கள் என்ன?” எனக் கேட்க,

 ما شاء الله لا حول ولا قوة إلا بالله

எனக் கூறுவதாகும் என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுத் தர்கீப்)

  1. சுவனத்தின் கதவுகளில் ஒன்றாகும்.

"சுவனத்தின் கதவுகளில் ஒன்றை உனக்கு அறிவித்துத் தரட்டுமா?" என நபியவர்கள் வினவிவிட்டு,

لا حول ولا قوة إلا بالله

என்ற வார்த்தையைக் கற்றுக் கொடுத்தார்கள். (ஸஹீஹுத் திர்மிதி)

  1. பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணங்களில் ஒன்றாக அமையும்.

நபியவர்கள் கூறினார்கள்: "பூமியில் ஒரு மனிதன்

لا إله إلا الله والله أكبر وسبحان الله والحمد لله ولا حول ولا قوة إلا بالله

என்று கூறுவானென்றால், அவனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அவை அமைந்துவிடும். அவை கடல் நுரையளவு இருந்தாலும் சரியே!" (அஹ்மத்)

-        இன்ஷா அல்லாஹ் தொடரும்.