ஷவ்வால் மாத ஆறு நோன்புகளும் தொடர்ச்சியாக நோற்கப்பட வேண்டுமா?

بسم الله الرحمن الرحيم

விடை: ஷவ்வால் மாத ஆறு நோன்புகளும் தொடர்ச்சியாக நோற்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையல்ல. மாதத்தின் ஆரம்பத்தில் தான் நோற்கப்பட வேண்டும் என்பதும் நிபந்தனையல்ல. மாறாக, ஆறு நோன்புகளும் பிரிக்கப்பட்டவாறு நோற்கப்பட முடியும். அல்லது அவைகளை மாதத்தின் இறுதிப்பகுதியிலும் நோற்க முடியும். எவ்வாறு நோன்பு நோற்றாலும் அவர் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்றவராகவே கருதப்படுவார். ஷாபிஈ, ஹன்பலீ மத்ஹபைச் சார்ந்தவர்கள் இக்கருத்தையே தெளிவுபடுத்தியுள்ளனர். இக்கருத்து சரியான கருத்து என்று நவீன காலத்து அறிஞர்களாகிய அஷ்ஷெய்க் பின் பாஸ், அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன், அஷ்ஷெய்க் முக்பில் அல்வாதிஈ ஆகியோர் பத்வா வழங்கியுள்ளனர்.

-    பார்க்க: பத்ஹுல் அல்லாம்: 2/707, அல்முங்னீ: 4/438, ஷர்ஹுல் முஹத்தப்: 6/379.

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்