வியாபாரம் செல்லுபடியாவதற்கு….

بسم الله الرحمن الرحيم

வியாபாரம் செல்லுபடியாவதற்கு ஆறு நிபந்தனைகள் உள்ளன.

  1. வியாபாரத்தை மேற்கொள்பவர்களுக்கு மத்தியில் குறித்த வியாபரத்தில் விருப்பம் காணப்பட வேண்டும்.
  2. வியாபரத்தை மேற்கொள்ளக்கூடியவர்கள் வியாபார நடிவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  3. விற்கப்படும் பொருள் ஹலாலானதாக இருக்க வேண்டும்.
  4. விற்கப்படும் பொருள் பெற்றுக் கொள்ள முடியுமானதாக இருக்க வேண்டும்.
  5. வியாபார உடன்படிக்கை, பொருளின் சொந்தக்காரரினால் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவரினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  6. விற்பனைப் பொருளும் அதன் விலையும் பார்வை மூலம் அல்லது பண்பின் மூலம் அறியப்பட்டதாக இருக்க வேண்டும்.

எனவே, இவ்வாறான நிபந்தனைகளைத் தழுவிய விதத்தில் அமைந்த வியாபாரம், நிச்சயமாக மார்க்கத்தில் அங்கீரிக்கப்பட்ட வியாபாரமாகக் கருதப்படும்.

பார்க்க: தவ்லீஹுல் அஹ்காம்: (4 / 213, 214), அல்முலஹ்ஹஸுல் பிக்ஹி: (2 / 9, 10)