முஷ்ரிக்களின் விழாக்களில் கலந்து கொள்ளலாமா?

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: முஷ்ரிக்களின் விழாக்களில் பங்கு கொள்ளக்கூடாது என அறிஞர்கள் ஏகோபித்த கருத்தை முன்வைத்துள்ளார்கள். நான்கு மத்ஹபுளைச் சார்ந்தவர்களும் இதனைத் தங்களின் புத்தகங்களில் விரிவாக விளக்கியுள்ளார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் சரியான அறிவிப்பாளர் வரிசையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்: நீங்கள் முஷ்ரிக்களின் விழா நாட்களில் அவர்களின் மத இஸ்தானங்களுக்குள் நுழையாதீர்கள். ஏனெனில், அவ்வேளையில் இறைவனின் கோபம் அவர்கள் மீது இறங்குகின்றது.

மேலும் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் எதிகளை அவர்களின் விழாக்களில் தவிர்ந்து கொள்ளுங்கள்.

யார் அந்நியர்கள் வாழும் பகுதிகளால் செல்லும் போது அவர்களின் கொண்டாட்டங்கள் மற்றும் அவர்களின் விழாக்களில் கலந்து கொண்டு மரணம் வரை அவர்களுக்கு ஒப்பாக நடந்து கொள்கின்றார்களோ அத்தகையவர்கள் மறுமையில் அவர்களுடன் எழுப்பப்படுவார்கள் என நபியவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

-     பைஹகீ

-     பார்க்க: அஹ்காமு அஹ்லித் திம்மா லிப்னில் கையிம் ரஹிமஹுல்லாஹ் 1/723-724

- தமிழாக்கம்: அபூ முஆத் ஜமாலுத்தீன் பின் பாரூக்