மார்க்க விளக்க வகுப்புக்களில் பங்கேற்க அழைக்கின்றோம்!

بسم الله الرحمن الرحيم

ஈழத் திருநாட்டில் ஹட்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட சகோதரர் நவ்வாஸ் அவர்கள் எமது பள்ளிவாசலுக்கு விஜயம் செய்துள்ளார்கள். இவர் சுமார் 13 வருடங்கள் யமன் நாட்டில் தாருல் ஹதீஸ் கலாபீடத்தில் மார்க்கக் கல்வியைப் பயின்று, அங்கேயே கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அல்குர்ஆனையும் நபியவர்களினது பொன்மொழிகளையும் நல்ல முறையில் மனனமிட்டு, இஸ்லாத்தின் பல அடிப்படைக் கலைகளையும் துறைபோகக் கற்றுள்ளார். இப்படி மார்க்கக் கல்வியுடன் தொடர்புபட்ட பல அறிவுகளைத் தன்வசம் வைத்திருக்கும் இச்சகோதரர் எமது நாட்டு மக்களுக்கு மார்க்கக் கல்வியைத் தெளிவுறக் கற்பதற்குக் கிடைந்த நற்பாக்கியம் என்றுதான் கூற வேண்டும்.

எனவே, இத்தருணத்தைப் பயன்படுத்தி பலகத்துறையில் அமையப்பெற்ற அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசல் மக்களுக்குப் பயன்தரும் பல வகுப்புக்களை நடாத்துவதற்கு அவருக்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளது. ஆகவே, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் முகமாக எமது பள்ளிவாசலை நோக்கி வருகை தருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். உலமாக்கள், அழைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் உற்பட பலரும் நேரில் கலந்து கொண்டு மார்க்க விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என நினைக்கின்றோம்.

அவர் நடாத்திவரும் வகுப்புக்களாவன:

கிதாபுத் தவ்ஹீத் விளக்கவுரை – தினமும் பஜ்ருத் தொழுகையைத் தொடர்ந்து

ஹாதிஹீ தஃவதுனா வஅகீததுனா என்ற நூலுக்கான விளக்கவுரை – தினமும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து

தஜ்வீதுடன் அல்குர்ஆனை ஓதப் பழக்குதல் - தினமும் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து

இவ்வகுப்புக்கள் யாவும் தமிழ் மொழியில் நடைபெறுகின்றன. இவை தவிர இன்னும் சில பாடங்கள் பிரத்தியோகமான அமர்வுகளில் அறபு மொழியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றன.

மேலும், எம்மிடத்தில் வந்து படிக்க நாடும் சகோதரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

இவ்வருட்கொடையை உதாசீனம் செய்யாதீர்கள்!

நிச்சயமாக இது பற்றி நீங்கள் அனைவரும் மறுமை நாளில் விசாரிக்கப்படவுள்ளீர்கள்.