புதிய மாணவர் தெரிவு – 1436/2015

بسم الله الرحمن الرحيم

அல்கமா அறபுக் கல்லூரி

அல்கமா அறபுக் கல்லூரி தனது முழு நேரக் கற்கை நெறி மற்றும் பகுதி நேரக் கற்கை நெறிக்குமான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தை அடிப்படையாக வைத்து கற்றுக் கொடுப்பதை வழிமுறையாகக் கொண்டு செயற்படும் இம்மத்ரஸா அதனை வாழ்வில் நிலை நாட்டுவதற்குரிய பயிற்சிகளை வழங்குகின்றது. கற்றல், நடைமுறைப்படுத்தல், பிறருக்கு எத்திவைத்தல் ஆகிய இந்த மூன்று அடிப்படை அம்சங்களையும் தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றது.

அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் கரங்களால் பதியப்பட்ட தலையாய நூற்கள் இம்மத்ரஸாவின் பாடத்திட்டத்தில் இடம் பிடித்துள்ளன. மேலும், இங்கிருந்து வெளியாகும் மாணவர்கள் அல்குர்ஆனையும் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களையும் அகீதாவின் மூலநூற்களையும் மனனமிட்டவர்களாகவும் மற்றும் அதன் விளக்கங்களைப் பெற்றவர்களாகவும் திகழுவார்கள். இன்ஷா அல்லாஹ்.

ழுழு நேரக் கற்கை நெறிக்கு 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் பகுதி நேரக் கற்கை நெறிக்கு 11-14 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் யாவும் டிசம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக எமக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தொடர்புகளுக்கு:

MADRASA ALQAMAH,

56/1, THAKKIYA ROAD,

PORUTHOTA,

KOCHCHIKADE.

Telephone : 0312274013, 0777199095