பித்னாக்களில் இருந்தும் பாதுகாப்புப் பெற்றவரே மனமகிழ்ச்சிக்குரியவராவார்!

بسم الله الرحمن الرحيم

இவ்வுரையானது அபூதாவுத் எனும் கிரந்தத்தில் மிக்தாத் இப்னுல் அஸ்வத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவான: நிச்சயமாக மனமகிழ்ச்சிக்குரியவர் சோதனைகளில் இருந்தும் பாதுகாப்புப் பெற்றவராவார் என நபியவர்கள் மூன்று முறை கூறிவிட்டு, மேலும் எவர் சோதனைக்குள்ளாகும் போது பொறுமையைக் கடைபிடிக்கிறாரோ அவரைப் பார்க்கையில் ஆச்சரியமாக உள்ளது என்ற ஹதீஸின் தெளிவை மையப்படுத்திக் காணப்படுகின்றது. இத்தெளிவுரையை யமன் நாட்டில் இருந்து தஃவா நோக்கமாக இலங்கையிலுள்ள அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசலை நோக்கி விஜயம் செய்ய அஷ்ஷெய்க் அபூ முஹம்மத் அப்துல் ஹமீத் அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கடந்த 14 ஷஃபான் 1435 (12 ஜூன் 2014) ந் தினத்தன்று நிகழ்த்தினார்கள். அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் அச்சமயமே குழுமியிருந்தவர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது. அதனையே இங்கு பதிவு செய்துள்ளோம்.

குறித்த தெளிவுரையின் போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் சாராம்சமாவது.

•    பித்னாக்களில் இருந்தும் பாதுகாக்கப்பட்டவரே மனிதர்களில் மனமகிழ்ச்சிக்குரியவராவார்.

•    பித்னாக்களின் போது பொறுமையைக் கடைபிடிப்பது ஆச்சரியமாளிக்கக்கூடிய காரியமாகும்.

•    அதிகமான மக்கள் பித்னாக்களின் போது விரக்தியடைந்து தாம் ஏற்றிருக்கும் சரியான வழிகாட்டலைவிட்டும் விலகிச் செல்கின்றனர். அத்தகையவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள்.

•    பித்னாக்களில் இருந்து பாதுகாப்புப்பெற துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.

•    மனிதன் முகம் கொடுக்கக்கூடிய பித்னாக்களில் மிக முக்கியமான பித்னா அவன் ஏற்றிருக்கும் மார்க்கத்தில் உண்டாகும் பித்னாவாகும். இத்தகைய பித்னாவில் இருந்தும் ஈடேற்றம் பெற நல்லமல்களில் ஈடுபாடு காட்ட வேண்டும்.

•    பித்னாக்கள் உண்டாகும் மூன்று பிரதான இஸ்தானங்கள்:

1.    வயிறுடன் இணைந்த நாவு

2.    மறை உறுப்பு

3.    மனோ இச்சை

•    வயிறு, நாவு மற்றும் மறை உறுப்பு ஆகியன ஹராமான வழிகளில் பயன்படுத்தப்படும் போதே அவற்றின் பித்னாக்கள் வெளிப்படுகின்றன.

•    பெண்களின் பித்னாவும் அவற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு கடைபிடிக்க வேண்டிய அம்சங்களும்.

1.    ஹிஜாப் அணிதலும் தம்மை முழுமையாக மறைத்துக் கொள்ளலும்.

2.    வாசனைகள் பூசி ஆண்களுக்கு மத்தியில் செல்லாமை.

3.    ஆண் பெண் கலப்பைத் தவிர்த்தல்.

4.    பார்வையைத் தாழ்த்துதல்

5.    அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் அலங்காரத்தைத் தவிர்த்தல்.

•    பணத்தால் உண்டாகும் பித்னா விடயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளல்.

•    பெண்கள் அவசியம் தங்கள் முகங்களை மறைத்தாக வேண்டும் என்பது தொடர்பான விளக்கம்.

•    பித்னாவைத் தவிர்ப்பதில் திருமணம் பெரும் பங்காற்றுகின்றது.

•    மனோ இச்சைக்கு வழிப்பட்டு பித்அத்துக்களில் சிக்குண்டவர்கள் கடுமையான எச்சரிக்கைக்கு உள்ளானவர்கள்.

•    பித்அத்துடன் தொடர்புடைய பிரிவுகள் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

•    நாம் சுன்னாவைக் கடைபிடித்து ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையை பித்னாக்கள் பரவியிருக்கும் இக்காலத்தில் கடைபிடிப்போம் என்றால் எமக்கு என்றும் விமோசனம் உண்டு.

எனவே, மார்க்கத்தை கற்போம்! அதன்படி வாழ்வோம்! அல்லாஹ் எம்மை பித்னாக்களில் இருந்தும் பாதுகாப்பான்.

[audio:http://www.salafvoice.org/audio_db/43844925.mp3]

Click Here to Download