பள்ளிவாசல் கட்டிட நிர்மாணப் பணிக்காகப் பணம் சேர்க்கும் நோக்கில் பள்ளிவாசலினுள் உண்டியல் வைக்க அனுமதியுள்ளதா?

بسم الله الرحمن الرحيم

மேற்குறித்த நோக்கத்திற்காக உண்டியல் வைப்பது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட ஒரு விடயமாகும். நபியவர்களின் பள்ளிவாசலில் பல தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருந்தும் ஒருபோதும் அவர்கள் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டதில்லை. அத்தோடு நபியவர்களின் பள்ளிவாசலில் வீற்றிருந்த திண்ணை தோழர்கள் அத்தியவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றுவதற்கு வசதியில்லாமல் இருந்த சந்தர்ப்பத்திலும் அவர்களின் நலம் கருதி நபியவர்கள் இவ்வாறான எச்செயலிலும் ஈடுபடவில்லை. எனவே, இச்செயலை அவசியம் தவிர்ந்தாக வேண்டும்.

-     ஹிஜ்ரி 1435 ஷஃபான் மாதம் 02 ந் திகதி அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசலில் வைத்து கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலே இது.

- தமிழில்: அபூஹுனைப்