பஜ்ருக்கு முன் மாதவிடாயில் இருந்து சுத்தமான பெண்ணுக்கு அன்றைய தினம் நோன்பு நோற்க முடியுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: ஒரு பெண் பஜ்ரை அடைவதற்கு முன் மாதவிடாயில் இருந்து சுத்தமாகிவிட்டால் அவர் தனது கடமையான குளிப்பை பஜ்ருக்குப் பின் ஆக்கிவிட்டு நோன்பு நோற்க முடியுமா?

பதில்: ஆம். நபியவர்கள் தன்னுடைய மனைவியருடன் ரமழானின் இரவில் உறவில் ஈடுபட்டுவிட்டு குளிப்புக் கடமையானவர்களாக நோன்பு நோற்பதாகவும் பிறகு பஜ்ருத் தொழுகைக்காகக் குளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு பெண் பஜ்ருக்கு முன்னதாக சுத்தத்தை உணர்ந்தால் நோன்பு நோற்பதற்காக உடனடியாகக் குளிப்பது அவசியமன்று. மாற்றமாக, அந்நிலையிலேயே நோன்பை நோற்று ஸகருக்குப் பிறகு தொழுகைக்காகக் குளித்தால் அது அவருக்குப் போதுமானதாகும். எனவே, இப்படியாகச் சுத்தத்தை உணர்ந்த பெண்மணிக்கு ஒரு போதும் அன்றைய தினத்தின் நோன்பைவிட முடியாது.

(சுருக்கம்: அல்கன்ஸுஸ் ஸமீன்)

- அபூ ஹுனைப்