நாம் தொழுகையில் விடும் தவறுகள் – 01

بسم الله الرحمن الرحيم

இறுக்கமான ஆடையுடன் தொழுதல்

 அவ்ரத்தை வெளிப்படுத்தக்கூடிய அல்லது அதன் அளவை எடுத்துக் காட்டக்கூடிய இறுக்கமான ஆடை அணிந்து தொழுவது கூடாது. (ஷெய்க் மஷ்ஹூர் ஹஸன் / அல்கவ்லுல் முபீன்)

அல்லாஹ் கூறுகின்றான் : ஆதமுடைய மக்களே ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களை (ஆடைகளால்) அலங்கரித்துக் கொள்ளுங்கள். (சூரதுல் அஃராப் : 31)

இவ்வாறான (இறுக்கமான) ஆடைகளால் அவ்ரத் மறைக்கப்பட்ட நிலையில் ஒரு மனிதன் தொழுதால் அவ்ரத் மறைக்கப்பட்ட வகையில் தொழுகை செல்லுபடியாகும். என்றாலும் இறுக்கமான ஆடை அணிந்த வகையில் குற்றவாளியாவார். ஏனென்றால் ஆடையின் இறுக்கத்தால் தொழுகையின் கடமைகளில் குளறுபடி ஏற்படலாம் என்பது ஒரு விடயம். மற்றவர்கள் பித்னாவுக்குள்ளாகி அவரின் பக்கம் பார்வையைத் திருப்புவார்கள் என்பது இரண்டாவது விடயம். குறிப்பாகப் பெண்களாக இருந்தால். (ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் / அல் முன்தகா)

- அபூ உபைதில்லாஹ் ஸில்மி (மதனி)