நபியவர்கள் மீது கூறப்படும் ஸலவாத்தை எழுத்துருவில் சுருக்கமாக (ص) என்று அல்லது (صلعم) என்று எழுத முடியுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: எம்மில் அதிகமானவர்கள் நபியவர்களின் நாமத்தைக் குறிப்பிட்டதன் பிற்பாடு அவர்கள் மீது ஸலவாத்துக் கூற முற்படும் போது (ص) என்று அல்லது (صلعم) என்று எழுதுகிறார்களே! இது அனுமதிக்கத்தக்க ஒரு காரியமா?

பதில்: நபியவர்கள் மீது கூறப்படுகின்ற ஸலவாத்தை எழுத்துருப்படுத்தும் போது (ص) என்று அல்லது (صلعم) என்று எழுதுவது தவறானதும் குறையை உண்டுபன்னக்கூடியதுமான செயலாகும். மேலும், இவ்வாறு நடந்து கொள்வது சரியான நிலைப்பாட்டிற்கு மாற்றம் செய்வதாகவும் அமைகின்றது. பகரமாக صلى الله عليه وآله وسلم என்று முழுமையாக எழுத வேண்டும்.

இவ்வாறு சுருக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது குறித்த நபருக்கு நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதால் கிடைக்கவிருக்கின்ற கூலிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடுகின்றது. மேலும், அல்லாஹ்விடத்தில் நின்றும் உள்ள உயர்விஸ்தானத்தில் அவருக்கிருக்கின்ற மேன்மைக்கும் தடைக்கல்லாக அமைகிறது.

நபியவர்கள் கூறுகின்றார்கள்: 'யார் என்மீது ஒரு முறை ஸலவாத்துச் சொல்கிறாரோ அல்லாஹ் அவர் மீது பத்து முறைகள் ஸலவாத்துச் சொல்கிறான்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூட்கள்: முஸ்லிம், அபூதாவுத், திர்மிதி, அஹ்மத்)

-     பதாவா அஷ்ஷெய்க் யெஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ்

-     தமிழில்: அபூஹுனைப்

குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட சட்டம் தமிழ் மொழியில் ஸலவாத்துடைய வாசகங்களை எழுதுகின்ற போது (ஸல்) என்று அடைப்புக்குறிக்குள் இடுபவர்களுக்கும் பொருத்தமானதாக உள்ளது.