தேர்தல்களின் எதார்த்த நிலை என்ன?

بسم الله الرحمن الرحيم

فإذا قيل لك: ما حقيقة الانتخابات؟ فقل: هي من النظام الديمقراطي المنابذ لشرع الله الحق، وهي تشبه بالكفار، والتشبه بهم لا يجوز, وفيها ضرر كثير, وليس فيها أي نفع ولا أي فائدة للمسلمين, ومن أهم أضرارها: مساواة الحق بالباطل والمحق بالمبطل حسب الأكثرية, وتضييع الولاء والبراء, وتمزيق شمل المسلمين, وإلقاء العداوة والبغضاء والتحزب والتعصب بينهم, والغش، والخداع، والاحتيال، والزور، وضياع الأوقات والأموال, وإهدار حشمة النساء, وزعزعة الثقة في علوم الشريعة الإسلامية وأهلها.

தேர்தல்களின் எதார்த்த நிலை என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அவை அல்லாஹ்வின் உண்மையான சட்டத்திற்கு மாற்றமான ஜனநாயக ஒழுங்குமுறையில் நின்றும் உள்ளதாகும் என்று கூறு. மேலும், அவை காபீர்களுக்கு ஒப்பாவதாகும். அவர்களுக்கு ஒப்பாவது கூடாது. இன்னும், அவற்றில் அதிக கெடுதிகள் உள்ளன. அத்துடன் அவற்றில் எந்த நலவும் மற்றும் எந்தப் பிரயோசனமும் முஸ்லிம்களுக்குக் கிடையாது. அதன் கெடுதிகளில் மிகப் பிரதானமானவையாக: சத்தியத்தையும் அசத்தியத்தையும் சமநிலைப்படுத்தல், பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டு சீர்குலைப்பவனை வாய்மையாளனாக்குதல், அல்வலாஉ – முஃமின்களுடனான நேசம் – , அல்பராஉ – இறைவிரோதிகளுடனான பகைமை – ஆகிய இரு அம்சங்களையும் வீணடித்தல், முஸ்லிம்களின் கூட்டமைப்பைக் கிழித்தெறிதல், அவர்களுக்கு மத்தியில் விரோதம், கோபம், பிரிவினைவாதம், இனவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தல், மேலும் ஏமாற்றல், சதி செய்தல், தந்திரம் செய்தல், பொய்யுரைத்தல், நேரங்கள் மற்றும் செல்வங்களை வீணடித்தல், பெண்களின் கூச்ச சுபாவத்தைப் போக்குதல், இஸ்லாமிய மார்க்கக் கலைகளிலும், அதன் சொந்தக்காரர்களாகத் திகழுகின்றவர்களிலும் உள்ள நம்பிக்கையை மறைத்தல் (போன்றவற்றைக் குறிப்பிடலாம்)