தடம்புரண்ட காரிலும் அகீதாவைக் கற்றுக்கொடுத்த பேரறிஞர்

بسم الله الرحمن الرحيم

ஷெய்ஹ் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவர்களில் ஒருவர் கூறுகிறார்:

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அறிந்த விதத்தில் சுன்னாவின் மீது பெரும் ஆர்வம் கொள்வதிலும் அதற்கு கடுமையாக உதவி புரிவதிலும் அதைப் பின்பற்றுவதிலும் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை விட வேறு எவரையும் எண் கண்கள் பார்த்ததில்லை.

ஒருமுறை அவர் பயணித்த கார் வண்டி ஜித்தாவுக்கும் மதீனாவுக்கும் இடையில் தடம்புரண்டது. காரிலிருந்த சில மனிதர்கள் "யா ஸத்தார் யா ஸத்தார்" என்று பதற்றத்துடன் அல்லாஹ்வை அழைத்தனர்.

அப்போது தடம்புரண்ட காருக்கு கீழிருந்த அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் "யா ஸித்தீர் என்று கூறுங்கள். "யா ஸத்தார்" என்று கூறாதீர்கள். ஏனெனில், ஸத்தார் என்பது அல்லாஹ்வுடைய பெயரல்ல. ஹதீஸில் நபியவர்கள் கூறினார்கள் (நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படக்கூடியவன் மேலும், அவன் (ஸித்தீர்) மறைக்கக்கூடியவன், மறைப்பதை விரும்பக்கூடியவன்.)" என்று கூறினார்கள்.

நூல்: மகாலாதுல் அல்பானீ, பக்கம்: 191