சூரியன் மறைந்துவிட்டது என்று கருதி நோன்பை திறப்பதின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

மேகமூட்டம் போன்றவற்றின் காரணமாக சூரியன் மறைவதை உறுதிப்படுத்தப்படுத்த முடியாத நிலை இருந்தால் இவ்வாறு நோன்பைத் திறப்பது கூடும் என்று அதிகமான அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இதற்கு ஆதாரமாக அவர்கள் பின்வரும் ஹதீஸை முன்வைக்கின்றார்கள்: அஸ்மா பின்த் அபீபக்கர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: 'மேகமூட்டமுடைய ஒரு நாளில் நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நோன்பு திறந்தோம். பின்பு சூரியன் தென்பட்டது." (புஹாரீ: 1959)

இதுபோன்ற ஒரு சம்பவம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக இப்னு அபீஷைபா மற்றும் பைஹகீ ஆகிய கிரந்தங்களில் ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையின் மூலம் இடம்பெற்றுள்ளது. (இப்னு அபீஷைபா: 3/24, பைஹகீ: 4/217)

பார்க்க: அல்மஜ்மூஉ: 6/306, பத்ஹுல் அல்லாம்: 2/587)

- தமிழாக்கம்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்