கப்ருகளின் மீது மரம் நடுவதின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

விடை: ஈரமான கொப்புகள் அல்லது அது போன்றவைகளை கப்ரின் மீது வைப்பது சுன்னாவான ஒரு விடயமல்ல. மாறாக அது பித்அத்தாகும். மரணித்தவரைப்பற்றிய தீய எண்ணம் கொள்ளும் ஒரு செயலாகும்.ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு கப்ருக்கும் அதனை வைக்கவில்லை. மாறாக வேதனை செய்யப்படுகின்ற இரண்டு கப்ருகளின் மீதே வைத்தார்கள். எனவே ஈச்சங்கீற்று போன்றவற்றை கப்ரின் மீது வைப்பது மரணித்தவருக்கு செய்யப்படும் மிகப் பெரிய குற்றமாகும். அவரைப்பற்றிய தீய எண்ணம் கொள்ளும் ஒரு செயலுமாகும். தனது முஸ்லிமான சகோதரனைப்பற்றி தீய எண்ணம் கொள்வது யாருக்கும் ஆகுமாகாது. ஏனென்றால் இவ்வாறு ஈச்சங்கீற்று போன்றவற்றை கப்ரின் மீது வைப்பவர்கள் அக்கப்ரில் இருப்பவர் வேதனை செய்யப்படுகின்றார் என்று நம்பிக்கை கொள்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளின் மீதும் அவ்விரண்டும் வேதனை செய்யப்படுகின்றது என்பதை அறிந்தபோதே தவிர அதனை வைக்கவில்லை. இந்த விடையின் சுருக்கம் என்னவென்றால் ஈச்சங்கீற்று போன்றவற்றை கப்ரின் மீது வைப்பது பித்அத்தாகும். அதற்கு மார்க்கத்தில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அது மரணித்தவர் குறித்து தீய எண்ணம் கொள்ளும் ஒரு செயலுமாகும். ஏனென்றால் இவ்வாறு வைப்பவர்கள் கப்ரில் இருப்பவர் வேதனை செய்யப்படுகின்றார் என்றே எண்ணுகின்றார்கள். எனவே அவர் அவ்வேதனையை அவருக்கு இலகுவாக்க நாடுகின்றார். நாம் இவ்வாறு செய்தால் இவர் விடயத்தில் அல்லாஹ் எங்களுடைய இப்பரிந்துரையை ஏற்றுக்கொள்வானா? என்பது பற்றிய அறிவு எம்மிடம் இல்லை. கப்ரில் இருப்பவர் வேதனை செய்யப்படுகின்றார் என்பது பற்றிய அறிவும் எம்மிடம் இல்லை.

- மஜ்மூஉ பதாவா இப்னி உஸைமீன்: 17/191

- தமிழாக்கம்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்