“எனக்குத் தெரியாது” என்று சொல்ல வெட்கப்பட வேண்டாம்!

بسم الله الرحمن الرحيم

இமாம் ஷஃபீ (ரஹிமஹுல்லாஹ்) ஒரு விடயத்தைப் பற்றி கேட்கப்பட்டார். அவரோ "எனக்குத் தெரியாது" என்று கூறினார்.

அப்போது அவரிடத்தில் "நீங்கள் ஈராக் நாட்டின் மார்க்க மேதையாக இருக்கிறீர்கள், "எனக்குத் தெரியாது" என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று கூறப்பட்டது.

அதற்கு அவர் "வானவர்கள் (அல்லாஹ்விடம்) (உன்னை நாம் துதி செய்கிறோம், நீ கற்றுத்தந்த அறிவைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை) என்று கூறும்போது அவர்களும் வெட்கப்படவில்லையே" என்று பதிலளித்தார்கள்.

அல்பகீஹ் வல்முதபக்கிஹ்: 2/370