அறிவில் முதிர்ச்சி பெற்ற உலமாக்களுக்கு மத்தியில் பித்னா ஏற்படமாட்டாது!

بسم الله الرحمن الرحيم

கோள்வி: மதிப்பிற்குரிய அஷ்ஷெய்க் அவர்களே! அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்வானாக! அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கு மத்தியில் பித்னா ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது? அது விடயத்தில் எக்காரியம் நடந்தாக வேண்டும்?

பதில்: இன்ஷா அல்லாஹ். உலமாக்களுக்கு மத்தியில் பித்னா நிகழாது. (அதுவும்) அறிமுகமான உலமாக்களுக்கு மத்தியில் பித்னா நிகழமாட்டாது. மாற்றமாக தம்மிடத்தில் காணப்படும் குன்றிய அறிவின் காரணமாக உலமாக்களைப் போல் நடிப்பவர்கள் அல்லது அறிவைத் தேடும் பணியில் ஆரம்பமாகக் காலடி வைத்தவர்கள் போன்றவர்களுக்கு மத்தியிலேயே பித்னா நிகழும். தேர்ச்சி பெற்ற உலமாக்களைப் பொருத்தளவில் அவர்களுக்கு மத்தியில் பித்னா ஏற்படமாட்டாது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

-     பதிலளித்தவர்: அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் (1432.11.19)

-     தமிழில்: அபூஹுனைப்